கடல் பயணத்தில் சாட்சி Dallas, Texas, USA 64-0307 1ஜெபம் செய்ய, நமது தலைகளை வணங்குவதற்கு முன்பு, தேவனுடைய வார்த்தையில் சிலவற்றை நான் படிக்க விரும்புகிறேன். நான் அவருடைய வார்த்தைகளை வாசிக்க எப்பொழுதுமே விரும்புகிறேன், ஏனெனில் என்னுடைய வார்த்தைகள் தோல்வியடையும்; அவைகள் ஒரு மனிதனுடையது; ஆனால் அவருடைய வார்த்தையோ தோல்வி அடையாது. ஆகவே நீங்கள் மையப் பொருளைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருங்கள், இன்றிரவு நாம் மத்தேயு. 14 ஆம் அதிகாரம் 22 வசனம் முதல் வாசிப்போம். இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்கு போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம் பண்ண ஒரு மலையின் மேல் ஏறி, சாயங்காலமான போது அங்கே தனிமையாயிருந்தார். அதற்குள்ளாக படவு நடுக்கடலில் சேர்ந்து எதிர்க் காற்றுயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது. இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின் மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். அவர் கடலின் மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்க மடைந்து ஆவேசம் (ஆங்கில வேதாகமத்தில் “It is a Spirit” “அது ஒரு ஆவி'' என்றிருக்கின்றது - தமிழாக்கியோன்) என்று சொல்லி பயத்தினால் அலறினார்கள். உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள் நான்தான், பயப்படாதிருங்கள் என்றார். 2ஜெபத்திற்காக இப்பொழுது நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். இன்றிரவு தலைகளும் இருதயங்களும் தேவனுக்கு முன்பாக தாழ்த்தப்பட்டிருக்கையில், ஜெபத்திலே நினைவு கூரப்படும்படிக்கு, உங்களுடைய கரத்தையுயர்த்தி தேவனுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டிய தேவை ஏதாவது கட்டிடத்தில் இருக்கின்றதா? கர்த்தர் உங்கள் மேல் நோக்கமாயிருந்து, நம்மிடம் இரக்கமுள்ளவராயிருப்பாராக. 3எங்கள் பரலோக பிதாவே, கர்த்தராகிய இயேசுவின் வழியாகவும், நாமத்திலும் உம்முடைய சமுகத்திற்குள் இப்பொழுது நாங்கள் வருகின்றோம். அவருடைய நாமத்தில் நாங்கள் எதைக் கேட்டாலும் நீர் அதை எங்களுக்கு அளிப்பீர் என்று அவர் எங்களுக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கின்ற அந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாக்கை அறிந்தவர்களாயிருக்கிறோம். அதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம். இப்பொழுது நாங்கள் கூறுவதை நீர் கேட்டுக் கொண்டிருக்கின்றீர் என்பதைக் குறித்தும், நாங்கள் கொண்டிருக்கின்ற அந்த வாக்குத்தத்தத்தைக் குறித்து நாங்கள் எப்படி உணர்கின்றோம் என்பதை வார்த்தைகள் வெளிப்படுத்த முடியாது. கர்த்தாவே, நீர் அந்த கரங்களைப் பார்த்தீர். அவர்களுடைய தேவை என்னவென்பதை நீர் அறிந்திருக்கின்றீர். நீர் எல்லாம் அறிந்த, சர்வ வல்லமையுள்ள, முடிவில்லாத தேவன். நீர் ஜனங்களின் இருதயங்களை அறிந்திருக்கின்றீர் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். எங்களுடைய யோசனைகளை நீர் அறிந்திருக்கிறீர். நீர் முடிவில்லாதவராய் இருப்பதால், நாங்கள் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பே, நாங்கள் கொண்டிருக்கப் போகின்ற ஒவ்வொரு சிந்தனையும் நீர் அறிந்திருந்தீர். எங்கள் வாஞ்சைகள் உம்மிடம் சேர்கையில் வானங்களிலிருந்து கீழ் நோக்கி எங்களைப் பாரும் கர்த்தாவே, எங்களுடைய விண்ணப்பங்களை உம்முடைய சொந்த இருதயத்திற்கு கொண்டு செல்லும். கர்த்தாவே, மகிமையில் உள்ள உம்முடைய ஐசுவரியங்களின்படி எங்களுக்கு பதில் அளியும் என்று, கர்த்தாவே, இந்த மணி நேரத்தில் நாங்கள் ஜெபிக்கின்றோம். எங்களுடைய இருதயத்தின் வாஞ்சைகளை எங்களுக்கு அளியும். அது உம்முடைய தெய்வீக சித்தம் என்று நம்புகிறோம். உம்முடைய சித்தத்தைச் செய்வதே உமக்குப் பிரியமானது என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். கர்த்தாவே, இன்றிரவு மறுபடியுமாக மகத்தான உம்முடைய பிரசன்னத்தின் ஊற்றப்படுதலை எங்களுக்கு அளியும். வியாதியஸ்தரை சுகப்படுத்தும். இழந்துபோயுள்ளோரை இரட்சியும், பாவத்திலும் அக்கிரமத்திலும் மரித்துப் போயுள்ளோரை எழுப்பும், இன்றிரவு அவர்களை புதிய ஜீவனுக்குள் கொண்டு வாரும். நாங்கள் இயேசுவைக் காணட்டும். அவருடைய நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். உட்காரலாம். 4உட்கார முடிகின்ற அளவிற்கு எங்களால் ஜனங்களுக்கு உதவி செய்ய முடியாமையால் நாங்கள் வருந்துகிறோம். ஆனால் முதல் நாள் இரவு முதல் அநேக திரளான ஜனக் கூட்டத்தை திருப்பி அனுப்ப வேண்டியதாயிருந்தது என்று கூறினார்கள், அதற்காக நாங்கள் வருந்துகிறோம். ஆகவே சகோதரன் கிரான்ட் இன்னுமொரு அறையை கட்டவில்லை அதிலி... இந்த தடுப்பை அவர் இடதுபுறமாக கொண்டு செல்லப் போகிறார் என்று நான் நம்புகிறேன். விலையேறப்பெற்ற, அருமையான சகோதரன் டல்லாஸிலுள்ள அவருடைய சபைக்கு நான் திரும்ப வருவதை, நான் ஆண்டுதோறும் வருகின்ற ஒரு நிகழ்ச்சியாக்க முடியுமா என்று இன்று என்னிடம் கேட்டார். கதவுகள் மிக வேகமாக மூடப்படும் இந்த மணி நேரத்தில், நான் திரும்ப வந்து அதை ஒரு வருடாந்தர நிகழ்ச்சியாக்க இந்த மனிதன் விரும்புகிறார். அதை நான் மெச்சுகிறேன். சகோதரன் கார்டன் லின்ட்சே மற்றும் அவர்களில் அநேகருடன் இந்த காலை வேளையில் நான் ஐக்கியத்தின் நேரத்தைக் கொண்டவனாக இருந்தேன். பியுமான்ட்டில் வரப் போகின்ற கூட்டத்தின் செலவை ஏற்றிருக்கும் சகோதரன் பெரி கிரீன் இன்றிரவு எனக்கு பின் அமர்ந்திருக்கிறார். இன்னும் நம்முடைய அநேக நண்பர்கள், சகோதரன் டான் மற்றும் அவருடைய மனைவி அவர்கள் இங்கே இருப்பதைக் குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறோம். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக. 5இப்பொழுது, இன்றிரவு, ஒரு குழந்தையும் கூட புரிந்து கொள்ளுகின்ற அளவிற்கு என்னுடைய செய்திகளை எவ்வளவு எளிமையாக இருக்குமோ அவ்விதமாகச் செய்ய முயற்சிக்கிறேன். நாளை மதியம் சுவிசேஷ ஆராதனையாகும், நீங்கள் எல்லாரும் வரலாம் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, உங்கள் சொந்த சபையில் உங்களுக்கு ஆராதனைகள் இருக்குமானால், என்ன, நீங்கள் - நீங்கள் எங்கே இருக்க வைக்கப்பட்டிருக்கின்றீர்களோ, அங்கே இருங்கள். யாருமே தங்கள் சொந்த சபையை விட வேண்டுமென நாங்கள் விரும்புவதில்லை. ஆகவே நீங்கள் சுகவீனமாயிருந்து ஜெபிக்கப்பட நீங்கள் வர வேண்டுமென்றால், நாளை மதியம் உங்கள் சபையிலும் ஆராதனை இருக்குமானால், அதைக் குறித்து உங்கள் போதகரிடம் பேசுங்கள், அப்பொழுது அவர் தவறாக நினைக்கமாட்டார், உங்களுக்கு தெரியும். டல்லாஸிலும் அதைச் சுற்றிலும் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்ற இயேசு கிறிஸ்துவின் முழு சரீரத்திற்கு உதவவே இங்கே ஒத்துழைப்புடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை அவருக்கு தெரியப்படுத்துங்கள். ஆகவே நாளை மதியம், இரண்டரை மணிக்கு, ஒரு சுவிசேஷ செய்தியை பேசவிருப்பதாக நான் நினைக்கிறேன். ஆகவே பிறகு எல்லா வியாதியஸ்தருக்கும் ஜெபிக்கப் போகிறோம், எல்லா ஜெப அட்டைகளையும் வாரம் முழுவதும் விடப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் எடுத்து நாளை அவை எல்லாவற்றிற்கும் நாங்கள் ஜெபிப்போம். 6இப்பொழுது, சிறிது நேரத்திற்கு என்னுடைய பொருள் ஒரு சிறிய நாடகத்திற்கொத்த ஒன்றாக இருக்கும். நான் இன்றிரவு வியாதியஸ்தருக்காக ஜெபிக்கையில், என்னால் இயன்றவரை அதிகமானோரை வரிசையில் கொண்டுவர முயற்சிப்பேன். என்னுடைய தலைப்பு, இயேசு “பயப்படாதிருங்கள், நான் தான்” என்று கூறுவதாகும். என்னுடைய பொருள்: ''கடல் பயணத்தில் சாட்சி“. 7அது மதியபொழுதைக் கடந்த ஒருவேளையாக இருக்கும், இது நடந்த சமயத்தில் சூரியன் கீழே சென்று கொண்டிருக்க வேண்டும், ஆகவே இப்பொழுது இங்கேயுள்ளவாறே ஒரு வெப்பமான நாளாக அது இருந்திருக்கும். குளிர்சாதனப் பெட்டி பழுதடைந்துள்ளது, அதை அவர்கள் சரி செய்துக் கொண்டிருக்கின்றனர். அதன் காரணமாகத்தான் நான் பேச எத்தனித்திருந்ததிலிருந்து என்னுடைய பொருளை மாற்றினேன், ஏனெனில் நான் வேகமாக கடந்து செல்லலாம். ஆகவே இப்படிப்பட்ட ஒரு வெப்பத்தில் நீங்கள் உட்கார வேண்டியதாயிராது. 8இந்த பெரிய மீனவன், தான் நாள் முழுவதும் என்ன பெற்றிருந்தானோ அதைக் கண்ட பிறகு, இயேசு தம்முடைய மகத்தான ஊழியத்தில் இருந்ததைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவரைப் பின்பற்றியிருக்கும் படியாக அந்த நாளில் வாழ்ந்திருக்க நான் பிரியப்பட்டிருப்பேன். ஆனால் உங்களுக்கு தெரியுமா, அதே காரியத்தை நான் இன்னுமாகச் - செய்து கொண்டிருக்கும் சிலாக்கியத்தை உடையவனாக இருக்கிறேன் என்று நான் மகிழ்ச்சியுறுகிறேன்: காரியங்களை அவர் செய்வதைப் பார்த்துக் கொண்டிருப்பது. இப்பொழுது நான் அவரில் அதிகமாக விசுவாசம் கொண்டிருக்கின்றேன், அப்பொழுது இருந்திருப்பதைக் காட்டிலும் இப்பொழுது அதிகமாக விசுவாசிக்கலாம், ஏனெனில் சுவிசேஷம் சரி என்பதை நிரூபிக்க இரண்டாயிரம் ஆண்டுகளை நாம் கொண்டிருந்தோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, அவர் இன்றும் உயிரோடிருக்கின்றார், அப்பொழுது செய்ததை அப்படியே செய்து கொண்டிருக்கின்றார், ஆதலால் அவர்கள் கொண்டிருந்ததைக் காட்டிலும் இப்பொழுது நாம் இன்னுமாக மகத்தான நிச்சயத்தையும், விசுவாசத்திற்கான அதிக அஸ்திபாரத்தையும் கொண்டிருக்கின்றோம். ஏனெனில் அவர் ஒரு மனிதனாக, தாம் தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்டவரென்றும் தாம் தேவனுடைய குமாரனென்றும், அந்த நாளிற்கான அவருடைய வாக்குத்தத்த வார்த்தையை தம் மூலமாக தேவன் உறுதிப்படுத்திக் கொண்டிருப்பதாக சுற்றித் திரிந்து கூறிக் கொண்டிருந்தபோது, அவர்கள் அதைக் குறித்து சந்தேகிக்க ஏதோ ஒரு காரணம் உண்டு. அந்த வேத சாஸ்திர நிபுணர்கள், அவர்கள். ஆகவே நீங்கள் கவனியுங்கள் அது ஒரு பரிதாபமான காரியமாகும்; அது உண்மையாகவே பரிதாபத்திற்குரியதாகும், ஏனெனில் தேவன் அந்த வேத சாஸ்திர நிபுணர்களின் கண்களை குருடாக்காமல் இருந்திருந்தால் அவர்கள் அதை விசுவாசித்திருப்பார்கள். வேதாகமம் அவ்வாறு கூறுகின்றது. 9இன்றைக்கும் மறுபடியுமாக அவர்களுடைய கண்களை குருடாக்குவார், ஆதலால் அவர்கள் அதை காணமாட்டார்கள் என்று அவர் வாக்குத்தத்தம் செய்துள்ளது உங்களுக்கு தெரியுமா? அவர்கள் துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுக போகப் பிரியராயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும் நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள். மறுபடியுமாக அப்படியே சரியான ஒரு வாக்குத்தத்தம். ஆகவே நீங்கள் அவர்களை ஒருபோதும் - ஆனால் - ஆனால் அந்த ஜனங்களுக்காக வருத்தம் தான் கொள்வீர்கள். ஆகவே இந்நாள் வரைக்கும் அவர்களுடைய கண்கள் குருடாக்கப்பட்டிருக்கின்றன. சரியாக இந்த நாளில் இந்த மணி நேரத்தில் அது நிறைவேறும் என்று தேவன் வாக்குரைத்த அந்த வேத வசனங்களைக் கொண்டு, நாம் சரியாக அதை நோக்கிப் பார்த்து கவனித்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே அப்பொழுது ஜனங்கள் பார்த்து, தங்கள் தலையை அசைத்து, ''அதை என்னால் காண முடியவில்லை“ என்று கூறி நடந்து சென்று விடுவர். அது ஒரு பரிதாபமான காரியம், ஆனால் வேத வசனங்கள் நிறைவேற வேண்டியதாயிருக்கின்றது. அது அந்த விதமாகத்தான் இருக்க வேண்டும். 10ஆதலால் இந்த சீஷர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாய் இருந்தனர். நீங்கள் கவனித்தீர்களா, தாம் உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே அவர்களைத் தெரிந்து கொண்டார் என்றும், அவர்கள் நியமிக்கப்பட்ட தேவனுடைய வித்து என்றும் இயேசு அவர்களிடம் கூறினார். அதன் காரணமாகத்தான் சிக்கல்கள் வந்த போது, ஜனங்கள் ஒரு கேள்வியின் பேரில் இயேசுவை பொறியில் சிக்க வைத்துவிட்டனர் என்று எண்ணினர். அவர்களுக்கோ எந்த வித கேள்வியும் இல்லை. அவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் மற்றதைக் காட்டிலும் அவரை அறிந்து கொள்ளவேண்டும் என்பதில் அவர்கள் உறுதி கொண்டிருந்தனர். “ஜீவ வசனம் உம்மிடம் மாத்திரமே உண்டே'' ஆகவே அதனுடன் தரித்திருக்க வேண்டுமென்று அவர்கள் உறுதி கொண்டிருந்தனர், ஏனெனில் அவர்கள் அந்த அலுவலுக்காக (Office) நியமிக்கப்பட்டிருந்தனர். அதே தான் இன்றைக்கும், நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்ட மனிதரும் ஸ்திரீகளும் நித்திய ஜீவனுக்கு வருவர். ”பிதாவானவர் கொடுத்த யாவும் என்னிடத்தில் வரும் அது அவருடைய வார்த்தை, ஆகவே அது தவறாது. அது - அது தேவனுடைய வார்த்தை. 11ஆகவே இப்பொழுது, ஒரு மலையின் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மைதானத்தில் அன்றைய நாளில் ஒரு மகத்தான கூட்டத்தை கொண்டிருந்த இந்த சீஷர்களை நாம் பார்க்கிறோம். ஆகவே இயேசு அவர்களிடம், “இப்பொழுது, கடலைக் கடந்து எனக்கு முன்னே சென்று கொண்டிருங்கள்” என்று கூறினார். தனிமையாக ஜெபம் செய்ய அவர் மலையின் மேல் ஏறிச் சென்று கொண்டிருந்தார். ஆகவே இந்த சீஷர்கள், நண்பர்களை சந்தித்த பிறகு, எப்படியெல்லாம் உணர்ந்திருப்பார்கள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. ஏனெனில் நண்பர்களை சந்திப்பது, பிறகு நண்பர்களை விட்டு பிரிவது; அப்பொழுது தான் நீங்கள் பழகியிருக்கக் கூடும், உடனே நீங்கள் சென்று வருகிறேன் என்று கூற வேண்டியதாயிருக்கும். நாடு முழுவதும், உலகம் முழுவதிலும் நண்பர்களைச் சந்தித்தப் பிறகு அவர்களில் அநேகரை நியாயத்தீர்ப்பு வரையில் சந்திக்க முடியாது என்று தெரிந்திருந்தும் கூட அவர்களை விட்டுப் பிரிவது அது எப்பொழுதும் எனக்கு ஒரு இருதய வலியாக இருக்கிறது. அது ஒரு சோகமான ஒன்றாகும். 12கொக்கி வடிவிலான முடிச்சுடன் கரையில் இணைக்கப்பட்டிருந்த அந்த படகை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. பெரிய தசைகளைக் கொண்ட புயங்களையும் தோள்களையும் கொண்டிருந்த சீமோன் பேதுரு தான் படகைத் தள்ளி அதை கடலிற்குள் கொண்டு சென்றிருக்கக் கூடும். ஆகவே கரையில் இருந்தவர்களுக்கு இவர்கள் எல்லாரும் சென்று வருகிறேன், குட்- பை என்று கையசைத்துக் கொண்டிருந்தனர். அவர்களும், ''மறுபடியுமாக திரும்ப வாருங்கள். போதகரையும் அழைத்துக் கொண்டு வந்து எங்களைச் சந்தியுங்கள். திரும்பவுமாக வந்து இன்னுமொரு எழுப்புதலை நடத்துங்கள், “இன்றைக்கு நாங்கள் மிகவுமாக ஆசீர்வதிக்கப்பட்டோம்'' என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். புதிய நண்பர்களும் கையசைத்துக் கொண்டிருந்தனர். ஆகவே இவன் மற்ற சீஷர்களைத் தாண்டி துடுப்புகளை பிடித்தான். ஒருக்கால் தன் சகோதரனாகிய அந்திரேயாவின் அருகில் அமர்ந்திருப்பான். அப்போதிருந்த கப்பல்கள் காற்றினால் அல்லது அவர்கள் உபயோகித்த துடுப்புகளால் இயக்கப்பட்டன. ஆகவே அவர்கள் ஒரு படகில் இரண்டு பேராக, ஒரு பக்கத்தில் இரண்டாக உட்கார்ந்திருக்கலாம் அல்லது ஒரு இருக்கையில் இருவராக ஒருக்கால் ஆறு அல்லது எட்டு துடுப்பு பூட்டுகள் இருந்திருக்கலாம். எல்லாரும் ஒரே சமயத்தில் துடுப்பை இழுப்பார்கள், புயல் அடிக்கையில் அவர்கள் அவ்விதமாக படகை அதன் அடிக்கட்டையில் பிடித்துக் கொள்வார்கள். பிறகு காற்று சாதாரணமாக அடிக்கையில் பாய்மரத்தை ஏற்றி சென்று கொண்டிருப்பார்கள். 13அது ஒரு வெப்பம் மிகுந்த பிற்பகலாக இருந்திருக்கலாம், இந்த சம்பவத்திற்கு முன்னர் வேத வசனத்தில் அவ்விதமாக காணப்படுகின்றது. ஆகவே அது ஒரு மிக அமைதியான, சூரியன் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற, வெப்பம் மிகுந்த பிற்பகலாக வேளையாக இருந்திருக்கும். சூரியன் மறைந்துக் கொண்டிருந்தது. ஆகவே இவர்கள், துடுப்பை இழுத்து, கரையிலிருந்து கட்டை அவிழ்த்து, ''எப்பொழுதாவது ஒரு சமயத்தில் மறுபடியுமாக உங்களை சந்திப்போம் என்ற நம்புகிறோம்'' என்று ஜனங்களை நோக்கி குட்பை கூறி கடலிற்குள் செல்கையில் கையசைத்தனர். ஆகவே சூரிய அஸ்தமனம், சாயங்கால மந்தார ஒளி, பிறகு இருள் வந்தது. அவர்கள் துடுப்பை வேகமாக இழுத்து வேகத்தை அதிகரித்திருப்பார்கள், அந்த மிகப் பெரிய துடுப்புகள் கடலிற்குள் செல்லும் பொழுது துடுப்பை வலிப்பது மிக கடினமான ஒன்றாகும். அவர்களில் அநேகர் மீனவர்களாயிருந்தனர், கடலில் சென்று பழக்கப்பட்டவர்களான மிக பலம் வாய்ந்த மனிதர் ஆவர். இயேசு இன்னும் சீக்கிரத்தில் படகில் ஏறி அவர்களைப் பின் தொடர்வார் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன, அவர்கள் அங்கே சென்று, சிறிது துடுப்பைப் போட்டு சிறிது தூரம் சென்று கடற்கரையோரமாகவே படகை செலுத்திக் கொண்டிருந்தனர்: அதெப்படியெனில் உங்கள் சிறிய கப்பலை கிளப்பி பிறகு அப்படியே விடுவது. 14ஒருக்கால் வாலிப யோவான் பேச ஆரம்பித்தவர்களில் முதலாவதமாக இருந்திருப்பான், ஏனெனில் அந்த குழுவில், அவன் தான் இளையவனாக இருந்தான். ஆகவே ''நான் சிறிது களைப்பாக இருக்கிறேன். கரையோரமாகவே சற்று சென்று கொண்டிருப்போம் ஒரு நிமிடம் காத்திருப்போம்; ஓ, நாம் அவசரப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர் இன்னுமாக வரவில்லை, ஆதலால் நாம் சிறிது காத்திருப்போம், சற்று சுத்தமான காற்றைச் சுவாசிப்போம்,'' என்று இவ்வாறு கூறியிருப்பான். ஆகவே தன் தலையை கீழே சாய்த்தவனாக அங்கே உட்கார்ந்திருக்கையில், ஒரு சாட்சி கூட்டத்தை அவன் ஆரம்பித்திருப்பான். நான் அதைக் குறித்துதான் பேச விரும்புகிறேன். முதலாவதாக அவன் எழுந்து, “சகோதரரே, ஜனங்கள் என்ன கூறினாலும் சரி, எவ்வளவுதான் யாராவது அவிசுவாசிக்க விரும்பினாலும் சரி, நாம் ஒரு போலியான நபரை பின்பற்றவில்லை என்று இன்றைக்குப் பிறகு இன்னுமாக நான் நிச்சயம் கொள்கிறேன். தேவனேயன்றி அதற்கு குறைவான எதையும் நாம் பின்பற்றிக் கொண்டிருக்கவில்லை, ஏனெனில் இன்று அவர் செய்ததை தேவனேயன்றி எந்த ஒரு மனிதனாலும் செய்ய முடியாது, உங்களுக்கு தெரியுமா, அவர் அந்த பிஸ்கட்டுகளை (Biscuits) எடுத்து, அவைகளை உடைத்து அங்கே இருந்த ஐந்தாயிரம் பேரை போஷித்தார், அது எனக்கு மிக வியப்புக்கேதுவான ஒன்றாகும். இன்று வரைக்கும் ஒரு கேள்வி இருந்திருக்கும், ஆனால் இக்காரியம் அதை முற்றுபெறச் செய்துவிட்டது'' என்று கூறியிருப்பான். இப்பொழுது அவனுடைய சாட்சியை நான் அப்படியே கூறுகின்றேன். 15மேலும் கூறினான், ''வருடங்களுக்கு முன்னால் என்னால் நினைவு கூர முடிகின்றது. யோர்தானுக்கு அருகில் நான் இருந்ததுண்டு. யோர்தானின் கரைகளின் ஓரத்தில் கசகசா செடிகள் மலர்ந்து கொண்டிருக்கையில் நான் ஒரு சிறிய பையனாக இருக்கையில், எவ்வாறு என்னுடைய மிக நல்ல யூத்தாயார் மதிய வேளையில் என்னை தூக்கி, தன் மடியின் மீது உட்கார வைத்து அங்கே வெளியே தாழ்வாரத்தில் என்னை தாலாட்டினதை என்னால் நினைவு கூர முடிகின்றது. எந்த பாலைவனத்தின் வழியாக நம்முடைய ஜனங்கள் கொண்டு வரப்பட்டனரோ, அந்த பாலைவனமாகிய அதை அவர்கள் நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் எனக்கு வேதாகம கதைகளைக் கூறுவது வழக்கம். நான் நினைவு கூறுகின்ற மகத்தான கதைகளில் ஒன்று, சூனேமித்திய ஸ்திரீயினுடையது ஆகும். அவளுடைய சிறு பையன் மரித்த போது, ஆகவே - ஆகவே அந்த தீர்க்கதரிசி இந்த சிறிய பையனை மரித்த நிலையிலிருந்து உயிரோடு எழுப்பினான். அது ஒரு சிலிர்க்கச் செய்கின்ற கதையாகும்''. 16''அம்மா எனக்கு கூறினதில் மிகவும் மெய்சிலிர்க்கின்ற கதைகளில் ஒன்று, அவர்கள், “இப்பொழுது, யோவான், நீ ஒரு சிறிய பையன்; ஆனால் நீ பெரியவன் ஆகையில், அந்த மகத்தான யேகோவா நம்முடைய ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார் என்பதையும், நாம் அங்கே இருக்கின்ற நதிக்கு அப்பால் உள்ள வனாந்திரத்தின் வழியாக கடந்து வந்தோம் என்பதையும் நீ நினைவில் கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அந்த வனாந்திரத்தில் பிரயாணம் செய்த அந்த நாற்பது வருடங்கள் முழுவதும், துணிகள் வாங்க இடம் கிடையாது, சாப்பிட இடம் கிடையாது. ஆகவே தேவன் ஒவ்வொரு இரவும் வானத்திலிருந்து அப்பத்தை பொழியப் பண்ணி, அந்த வனாந்திரத்தில் நம்முடைய ஜனங்களை போஷித்தார், ஏனென்றால் அவர்கள் கடமை என்னும் வரிசையில் மகத்தான யேகோவாவை பின்பற்றிக் கொண்டிருந்தனர். ஆகவே இப்பொழுது, ஒரு நாளில் யேகோவா இங்கே பூமியின் மேலே ஒரு மனிதனுடைய வடிவிலே மாம்சமாக ஆக்கப்பட போகின்றார், அவர் அந்த அபிஷேகிக்கப்பட்ட ஒருவர், மேசியா என்று அழைக்கப்படுவார்'' என்று கூறினதாகும். 17''ஆகவே நான் நினைவில் கொள்கிறேன்,'' அவன் கூறுவான், ''ஒரு சிறிய பையனாக, எப்படி என்னுடைய சிறிய பிள்ளை மனது அதைக் கற்பனை செய்து பார்க்கும், அதைக் கற்பனை செய்ய முயற்சித்திருக்கும். “எப்படி தேவன் அந்த எல்லாருக்கும், இருபத்தைந்து லட்சம் ஜனங்களுக்கும் அந்த வனாந்திரத்தில் உணவு அளித்திருப்பார்? எல்லா அப்பமும் எங்கிருந்து அவருக்கு கிடைத்தது?” ஆகவே நான் அம்மாவிடம், “அம்மா அவர்... அங்கே மேலே வானத்தில் யேகோவா பெரிய வெப்ப அடுப்புகளை வைத்திருக்கின்றாரா, அவர் அதில் ரொட்டியைச் சுட்டு, இரவில் கீழே தள்ளி ஜனங்களுக்காக அந்த - அந்த அந்த நிலத்தின் மீது போடுவாரா, யேகோவாவின் பெரிய வானங்கள் முழுவதும் அடுப்புகள் இருக்கின்றதா?” என்று கேட்பதுண்டு. அதற்கு “இல்லை மகனே, அதை நீ புரிந்து கொள்வதற்கு மிகவும் சிறியவன். பார், யேகோவா சிருஷ்டிகர் ஆவார். அவருக்கு அடுப்புகள் தேவையில்லை. அவர் பேசுகிறார், அவர் பேசுகையில் அவருடைய வார்த்தை வெளிப்படுத்தப்படுகின்றது. அவர் மகத்தான யேகோவா, ஆகவே அவர் அதைப் பேச மாத்திரம் செய்தார். அந்த தூதர்கள் ஜனங்களுக்காக கீழே அதை நிலத்தின் மீது பகிர்ந்து கொடுப்பார்கள்” என்பார். 18“ஆகவே இன்று, அவர் அங்கே நின்றதை நான் பார்த்தபோது, அவருடைய முகத்தில் இருந்த அந்த சாயலை நீங்கள் கவனித்தீர்களா? அவருடைய மனதில் எந்த ஒரு சந்தேகமும் இருக்கவில்லை. நான் பின்னால் இருந்த அந்த பாறையின் மீது ஏறி அவர் அப்பத்தை எடுத்து அதைப் பிட்டபோது அவரைக் கவனித்தேன், அதை ஜனங்களுக்கு அளிக்க தம்முடைய ஊழியக்காரர்களாகிய நம்மிடம் அதை கொடுத்தார். திரும்பவுமாக அதை பிட்கச் சென்றபோது, அந்த அப்பம் மறுபடியுமாக முழுமையாக இருந்தது. எல்லாருக்கும் கிடைக்கும் வரையில், அவர் அவ்விதமாக நூற்றுக்கணக்கான தடவைகள் செய்தார், அங்கே கூடைகள் நிரம்ப எடுக்கப்பட்டன. அது யேகோவாவேயன்றி வேறெதுவும் இல்லை என்று நான் அறிந்து கொண்டேன். ஏனெனில் யேகோவா செய்த விதமாகவே அவர் செய்தார். யேகோவா மாத்திரமே சிருஷ்டிக்க முடியும். ஆகவே அந்த மனிதன் ஒரு போலியாள் அல்ல என்பது எனக்குத் தெரியும். ஒரே ஒரு சிருஷ்டிகர் மாத்திரமே உண்டு. அது யேகோவா ஆகும். ஆகவே இப்பொழுது, நான் கண்ட எல்லா காரியங்களைக் காட்டிலும் அது எனக்கு திருப்தியுண்டாக்கியது.'' ''என் இருதயம் முற்றிலுமாக சரணடைந்திருக்கின்றது. ஆகவே அவர் ஒரு தீர்க்கதரிசி மாத்திரம் அல்ல என்று நான் முழுவதுமாக விசுவாசிக்கின்றேன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவர் ஒரு தீர்க்கதரிசிதான், ஆனால் அவர் தீர்க்கதரிசியை விட மேலானவர். நம்மிடையே வாசம் செய்கின்ற யேகோவா தேவனேயன்றி அதற்குக் குறைவானவர் இல்லை, ஏனெனில் அவர் அப்பத்தை சிருஷ்டித்தார், யேகோவாவின் பழக்கங்களை அவர் கொண்டிருந்தார். ''என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால் நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. ஆனால் என் பிதாவின் கிரியைகளை நான் செய்கிறேன், உங்களால் என்னை விசுவாசிக்க முடியவில்லை. ஆனால் என் கிரியைகளை விசுவாசியுங்கள், “ஏனெனில் அவை நான் யாரென்று கூறி என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன''. ஜனங்கள் அதை எளிதாக பார்க்கக் கூடிய விதத்தில் காணப்பட்டது. ''நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், அவர் நாமம் ஆலோசனைக் கர்த்தா, சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா,'' என்று ஏசாயா உரைத்திருந்த மேசியா இவர்தான் என்பதில் யோவான் திருப்தியடைந்தான். தான் கண்டதைக் குறித்து யோவான் திருப்தி கொண்டான். அந்த வாலிப ஆள் தன்னுடைய சாட்சியை கொடுத்துக் கொண்டிருந்தான். 19அதே நேரத்தில் சீமோன் பேதுரு, ''நல்லது, இப்பொழுது, ஒரு நிமிடம். நாம் சாட்சி கூட்டத்தை கொண்டிருப்போமானால், நானும் ஏதாவது கூற விரும்புகிறேன். உங்களுக்கு தெரியுமா, மேசியா வரப்போகிறார் என்றும் தான் அவரை அறிமுகப்படுத்தப் போகிறவன் என்பதாக சாட்சியிட்ட யோவான் தீர்க்கதரிசியின் எழுப்புதலில் என்னுடைய சகோதரன் அந்திரேயா கலந்து கொண்டபோது, அந்த முழு காரியத்தைக் குறித்து நான் சந்தேகம் கொண்டவனாயிருந்தேன். அந்திரேயா என்னிடம் என்னவெல்லாம் கூறினானோ அதைக் குறித்து சிறிது சந்தேகம் கொண்டவனாக இருந்தேன், ஏனெனில் எல்லாவிதமான மேசியா கதைகளும் மற்றவைகளையும் நான் கேட்டிருக்கிறேன்''. “ஆனால் சகோதரராகிய நீங்கள் எல்லாரும் என்னுடைய வயதான அப்பாவை நினைவில் கொண்டிருப்பீர்கள். அவருடைய பெயர் யோனா என்பதாகும் - என்பதாகும். அவர் எப்படி ஒரு வைராக்கியமான விசுவாசியாக இருந்தார் என்பதை நீங்கள் நினைவில் கொண்டிருப்பீர்கள். என்னால் நினைவு கூர முடிகின்றது. எப்படி தாயாரும் அப்பாவும் நாங்கள் எல்லாரும், பிழைப்பதற்காக மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். ஒரு மீனையும் பிடிக்கவில்லையென்றால், எங்களுக்கு ஆகாரம் தேவையாயிருந்தது. ஆகவே நாங்கள் தரையில் அமர்ந்து தேவனை நோக்கி, ”இன்று எங்களுக்கு மீன் பிடிக்க உதவியருளும், தேவனே, நாங்கள் எங்கள் மீனை விற்று எங்கள் கடன்களை செலுத்திவிட்டு, நல்ல ஆகாரத்தை உண்ண ஏதுவாயிருக்கும் என்று ஜெபித்திருப்போம். ஆகவே புயலின் போது கடலிற்குள் சென்று அந்த புயல்களை துணிவாக சந்தித்திருப்போம்''. 20''ஆகவே அப்பா, அவருடைய நரைத்த மயிர் அவருக்கு பின்னால் தொங்கிக் கொண்டிருந்ததை என்னால் காண முடிகின்றது. ஒரு நாளில் அவர் படகின் நுனிக் கயிற்றில் உட்கார்ந்து கொண்டு என்னிடம் பேசினார், ''சீமோனே, நீ தான் என் மூத்த மகன். சீமோனே நான் மேசியாவைக் காண்பேன் என்று எப்பொழுதுமே விசுவாசித்துக் கொண்டிருந்தேன் என்பது உனக்குத் தெரியும். ஏதேன் முதற்கொண்டு நம்முடைய ஜனங்கள் அவரை எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எவ்வளவு காலமானாலும் சரி அவர் வரப் போகின்றார் என்பதில் நாம் நிச்சயம் கொண்டிருக்கிறோம். அது நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒன்றாயிற்றே என்று நீ கூறலாம், ஆனால் மேசியா வரப்போகின்றார் என்று நான் விசுவாசிக்கின்றேன். ஒவ்வொரு யூதனும் மேசியாவை தன்னுடைய சந்ததியில் காணுவான் என்று விசுவாசித்துக் கொண்டு வந்திருக்கின்றான். என்னுடைய சந்ததியில் அவரைக் காண்பேன் என்று நான் நம்புகிறேன். ஆனால் இப்பொழுது எனக்கு வயது முதிர்ந்துவிட்டது போல் தென்படுகின்றது, எனக்குத் தொடர்ச்சியான வலியும் சிரமமும் உண்டாகின்றது, கடலிற்குச் செல்வதை நான் நிறுத்த வேண்டும்; அநேகமாக என்னுடைய காலத்தில் அவரை நான் காணமாட்டேன். ஆனால் என் மகனே ஒருக்கால் நீ காணலாம்'', “ஆகவே வேத வசனங்களை நான் உனக்கு கற்றுத் தர விரும்புகிறேன். மகனே, மேசியா காட்சியில் எழும்புவதற்கு முன்பு எல்லாவிதமான காரியங்களும், எல்லாவிதமான பொய்க் காரியங்களும் உண்டாயிருக்கும், ஏனெனில் உண்மையான மேசியா வருகையில் அவருடைய செல்வாக்கைக் குலைத்துப் போட சாத்தான் அதைச் செய்வான்'' அது எப்பொழுதுமே அவ்விதமாகவே இருந்து வருகின்றது, இன்னுமாக அவ்விதமாகவே இருக்கின்றது. 21ஆகவே, பிறகு நாம் காண்பது என்னவென்றால், அவன் நான் ஞாபகம் கொள்கிறேன், அவர் தன்னுடைய கரத்தை என் மீது வைத்து, கூறினார், மகனே, அந்த மேசியாவை நீ அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய ஒரு வழிதான் இருக்கின்றது. இப்பொழுது, எந்த ஒரு தீர்க்கதரிசியும் இல்லாமல் நமக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன. மல்கியாதான் நம்முடைய கடைசி தீர்க்கதரிசியாய் இருந்தான். அது நானூறு வருடங்களுக்கு முன்பாக இருந்த ஒன்று; இன்னும் நமக்கு ஒரு தீர்க்கதரிசி இருக்கவில்லை. ஆனால் நினைவில் கொள், மேசியா வரும்போது, அவர் காட்சியில் தோன்றுகையில் அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார் என்று மோசே நமக்கு வேத வசனங்களில் கூறியுள்ளான். தீர்க்கதரிசியை விசுவாசிக்க கற்றுத் தரப்பட்டுள்ள யூதர்கள் நாம் ஆவோம். அவர் நமக்கு வாக்களித்தபடியே, பூமியில் மேசியாவின் பிரயாணம் தேவனால் உரைக்கப்பட்ட வார்த்தையாயிருக்கிறது. ஆகவே வார்த்தை எப்பொழுதுமே ஒரு தீர்க்கதரிசியிடம் மாத்திரமே வரும், அந்த வார்த்தையை தீர்க்கதரிசி உறுதிப்படுத்துவான். மகனே, நீ அதை எந்த விதத்திலும் மறந்து போகாதே. ஒருக்கால் மகத்தான காரியங்கள் எழும்பலாம்; மகத்தான உணர்ச்சி வசமான ஆர்வமிக்க காரியங்கள் மற்றும் - மற்றும் மகத்தான காரியங்கள் இருக்கலாம். ஆனால் நினைவில் கொள், மேசியா ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார், ஏனெனில் தேவன் தம்முடைய வழியை எப்பொழுதுமே மாற்றுவதில்லை என்பது நமக்குத் தெரியும், ஆகவே மேசியா ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார் என்று அவர் கூறியுள்ளார். ஆதலால் மகனே, கர்த்தருடைய வார்த்தையை கொண்டிருப்பவர்கள் தான் தீர்க்கதரிசிகள் ஆவர் என்பதை நினைவில் கொள். ஆகவே அந்த மேசியா வருகையில், அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார்.'' “அவருடைய கரத்தை இன்னுமாக என்னால் உணர முடிகின்றது'' என்று சீமோன் கூறினான், ”என் மேல் அவர் கரத்தை வைத்திருக்கையில், அந்த நேரத்தில் அந்திரேயா அங்கே நின்று வலையைக் கழுவிக் கொண்டிருந்தான். உனக்கு ஞாபகம் இருக்கின்றதா அந்திரேயா?'' “ஆமாம், சீமோனே, நான்... நான் நினைவு கூருகிறேன்.” 22''இந்த யோவான் ஒரு தீர்க்கதரிசியென்று அந்திரேயா என்னிடம் கூற முயற்சித்துக் கொண்டிருந்தான். நான் செய்ய வேண்டிய மற்ற காரியங்கள் இருந்தன. நான் மீனையும் மற்ற காரியங்களையும் விற்க வேண்டியவனாக இருந்தேன். ஆகவே தந்தை இறந்து வருடங்கள் ஆகின்றன. ஆனால் நான் அதை எப்பொழுதுமே என் மனதில் வைத்திருந்தேன்; வேத வசனத்தின்படியே அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்ற தீர்க்கதரிசியாக மேசியா இருப்பார், மறந்து போக வேண்டாம், ஏனெனில் அது உரைக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையாகும் என்று அப்பா கூறியிருக்கின்றார். ஆகவே அந்த வார்த்தையானது எப்பொழுதுமே தொடர்ச்சியாக தீர்க்கதரிசிகளிடம் வந்துள்ளது; அது அதை அடையாளம் காண்பித்தது அல்லது காலத்திற்கென்று என்ன வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருந்ததோ அதை வெளிப்படுத்தியது.'' ஆகவே இப்பொழுது சீமோன், கூறினான், அவன் கூறினான், ''ஒரு நாளிலே, உங்களுக்குத் தெரியுமா, ஒரு கூட்டத்திற்கு செல்லும்படிக்கு அந்திரேயா என்னிடம் கேட்டுக் கொண்டான். ஆகவே இந்த ஆளாகிய இயேசு இருந்த அந்த கூட்டத்திற்கு அங்கே நான் சென்றேன். எல்லாவிதமான வதந்திகளையும் நான் கேட்டிருக்கிறேன். மகத்தான ஏதோ ஒன்றாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்த அவருக்கு முன்பாக எழும்பியிருந்த ஒரு இயேசு அங்கே இருந்து நானூறு பேர்களை வெளியே வழி நடத்தினான். அவர்கள் எல்லாரும் மாண்டு போனார்கள், இப்படி இன்னும் நடந்தன. இது அவர்களைப் போன்ற மற்றுமொரு காரியம், ஏதோ ஒரு எழுப்புதலின் மகத்தான உணர்ச்சியார்வமிக்க ஒருவிதம், அல்லது அவர்கள் ஏற்படுத்தப் போகின்ற ஏதோ ஒரு மகத்தான ஸ்தாபனமாக இருக்கும் என்று நான் எண்ணினேன். ஆனால் ஒரு நாள் இங்கிருக்கும் என்னுடைய சகோதரனாகிய அந்திரேயாவுடன் செல்லலாம் என்று நான் எண்ணினேன்''. 23அந்த நேரத்தில் படகு குலுங்க ஆரம்பித்தது என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. யாரோ ஒருவன் சத்தம் போட்டு உட்காரு. படகை அசைக்காதே. “ஒரு நிமிடம் காத்திரு. அப்படியே நில்” என்று கூறினான். ஆகவே அவன் கூறினான் “உங்களுக்குத் தெரியுமா, நான் அங்கு சென்று முதல் முறையாக அவருடைய முகத்திற்கு நேராக நடந்து சென்றபோது, அவர் நேராக என் கண்ணை நோக்கிப் பார்த்து என் பெயர் என்ன என்பதை கூறினார். அதற்கு முன்பாக அவர் என்னைப் பார்த்ததில்லை. என் பெயரை மாத்திரம் அவர் அறிந்திருக்கவில்லை, வேத வசனங்களை எனக்குக் கற்பித்த தேவபக்தி மிகுந்த என்னுடைய வயதான தந்தையையும் அவர் அறிந்திருந்தார். ஆகவே அது மேசியாதான் என்று நான் அறிந்து கொண்டேன். அது எனக்கு ஒரு தீர்வை உண்டாக்கினது. அது - அதை எனக்கு சரியாக ஆக்கினது.'' 24பிலிப்பும் ''நானும் இங்கே ஒரு வார்த்தை கூறலாமா?'' என்று கூறியிருப்பான். இப்பொழுது, அவன் கூறினான், “சகோதரன் நாத்தான்வேல், இது உன்னை புண்படுத்தாதிருக்கட்டும்; ஏனென்றால் மேசியா என்னவாயிருப்பார் என்று வருடக் கணக்காக நாம் சுருள்களை ஆராய்ந்தோம் என்பது உனக்கு தெரியும். ஆனால் அவர் அதைச் செய்வதை நான் கண்டபோது, நான் புறப்பட்டு என் நண்பனாகிய நாத்தான்வேலை இங்கு அழைத்து வந்தேன். ஆகவே அவன் வந்த போது... நாத்தான்வேல், ''நானே அதைக் கூற அனுமதியுங்கள். நானே அதை கூறுவேனாக'' என்றான். ஓ, அந்த... உங்களுக்குத் தெரியுமா, இயேசு உங்களுக்கு - உங்களுக்கு ஏதாவதொன்றைச் செய்திருந்து அதைக் குறித்து ஏதாவதிருந்தால் உங்களால் அப்படியே நின்று கொண்டிருக்க முடியாது; நீங்களே அதைக் கூறவேண்டும் என்பீர்கள். அது சரிதானே? அது உண்மையான ஏதோ ஒன்றாயிருப்பின், நீங்கள் அதைக் கூறித்தான் ஆகவேண்டும். அவர் என்னை பரிசுத்த ஆவியால் நிரப்பின போது, அதைக் குறித்து கூற நான் விரும்புவேன். அதைக் குறித்து யாராவது அறிந்துகொள்ள வேண்டுமென்று நான் விரும்புவேன். வேறு யாரோ கூறுவது அல்ல; நானே அதைக் கூறிட விரும்புவேன். 25நாத்தான்வேல் மிக்க ஆர்வம் கொண்டு கூறியிருப்பான் என்று நான் கற்பனை செய்கிறேன். “உங்களுக்கு தெரியுமா? இதை நான் கூற விரும்புகிறேன். பிலிப்பு, நீ என்னிடம் கூறினபோது நான் சந்தேகித்தேன், நான் உன்னிடம் 'நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக் கூடுமா?' என்று கேட்டேன். “வந்து பார்'' என்கின்ற எந்த ஒரு மனிதனும் கொண்டிராத சிறந்த பதிலை நீ எனக்கு அளித்தாய், அது இன்றும் பொருந்தும். அது சரி. வீட்டிலே தங்கிக் கொண்டு குறை கூறிக் கொண்டிருக்காதே; வா, நீயே வந்து பார்த்துக்கொள். பாருங்கள்? ''நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக் கூடுமா?'' என்றேன், ''நீயே வந்து பார்“ என்றாய். ஆகவே நீ என்னிடம் என்ன கூறினாய் என்று நீ அறிவாய். ''ஆகவே நான் அவருடைய சமுகத்திற்குள்ளாக நடந்து சென்றபோது, நான் ஒரு - ஒரு எபிரெயன், ஒரு இஸ்ரவேலன், ஒரு நேர்மையான மனிதன் என்று என்னிடம் அவர் கூறினார், அதை அறிந்துக் கொண்டேன். ஆனால் நான் அது எப்படி ஆகும்?“ என்று ஆச்சரியப்பட்டேன். அவர் ஒரு சாதாரண மனிதனைப் போல காணப்பட்டார். பரலோகத்திலிருந்து வளைவுகளினூடே இருக்கின்ற பொன் நடைக் கூடத்தில் நடந்து எருசலேமுக்கு, நேராக ஸ்தாபன தலைவனிடத்திற்கு வந்து வெளியே நடந்து, 'காய்பாவே, நான் வந்து விட்டேன்' என்று கூறுவார். இவ்விதமாக மேசியா வருவார் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்''. ''ஆனால் அவர் நாசரேத்திலிருந்து, ஒரு ஏழ்மையான குடும்பத்திலிருந்து வருகிறார் என்றும், ஒரு முறை தவறிப் பிறந்த குழந்தை என்னும் அவப்பெயர் அவருக்கு பின்னால் இருப்பதாக அவர்கள் காண்கின்றனர். இங்கேயோ ஒரு ஆசாரியனைப் போன்றோ அல்லது யாரோ ஒருவனைப் போன்றோ இல்லாமல், ஒரு சாதாரண மனிதனாக, சாதாரண உடைகளை உடுத்தினவராக அவர் நின்று கொண்டிருந்தார். ஆகவே நான் அங்கே நடந்து சென்றபோது, 'அது எப்படி மேசியாவாக இருக்குமுடியும்?' என்று எண்ணினேன். ஒரு பழைய வஸ்திரத்தை அணிந்திருந்தார், அவர் ஒரு வாலிப ஆளாக இருந்த முதற்கொண்டு அதை அணிந்திருந்தார், அதே துணியை இங்கேயும் அணிந்திருந்தார், அவருடைய தலை மயிர் அவருக்கு பின்புறமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. தெருவில் இருக்கின்ற ஒரு சாதாரண மனிதனைப் போல - போல இருந்தார்''. ''அவர் என் முகத்திற்கு நேராக நோக்கிப் பார்த்து, 'பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே நீ மரத்தின் கீழே இருக்கையில் நான் உன்னைக் கண்டேன்' என்று கூறினார். அது எனக்குத் தீர்வையை உண்டாக்கிவிட்டது. அது மேசியாதான் என்று வார்த்தையின் படி நான் அறிந்து கொண்டேன். அது அவரேதான்.'' 26படகானது அசைந்திருக்கும், சாட்சி கூட்டமானது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஓ, அங்கே கடலின் மேல் என்ன ஒரு அருமையான சமயத்தை அவர்கள் கொண்டிருந்தனர், ஒரு மகத்தான சமயத்தை அவர்கள் கொண்டிருந்தனர். அந்திரேயா கூறினான், ''என்னை சிறிது குழப்பி தடுமாற்றம் அடையச் செய்த ஒன்றை நான் கூறிட விரும்புகிறேன், உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா, நாம் - நாம் எரிகோவிற்குச் சென்று கொண்டிருக்கையில் அவர், 'நாம் செல்லவேண்டும்; நான் சமாரியாவின் வழியாக செல்லவேண்டிய அவசியம் இருக்கின்றது என்று கூறினார் அல்லவா, ஆதலால் அவர் சமாரியாவிற்குச் சென்றார், அங்கே சீகார் பட்டணத்தின் அருகாமையில், நம்மை பட்டணத்திற்குள் பொருட்கள் வாங்க அனுப்பினார் அல்லவா?'' “ஓ, ஆமாம், நான் நன்றாக ஞாபகத்தில் வைத்துள்ளேன்” அவர்கள் எல்லாரும், “ஆமாம்”, “ஆமாம்,'' என்று கூறினார்கள். படகு சற்றே குலுங்கிக் கொண்டிருந்தது, எழுப்புதல் முடிவடைந்த பிறகு ஒவ்வொருவரும் ஒரு அற்புதமான சாட்சியை கொண்டிருந்தனர். ஆகவே அவர்கள் - இந்த சாட்சி கூட்டத்தை கொண்டிருந்தனர், 27ஆகவே அவன் கூறினான், “ஆம், நாம் நழுவிச் சென்று பார்த்த போது, நம்முடைய போதகர் ஒரு ஊரறிந்த விபசாரியுடன் பேசிக் கொண்டிருந்தது நமக்கு எதிர்பாரா அதிர்ச்சி அளித்ததே. 'ஹம் ஹம் அது மோசமான காரியம். இந்த வாலிப ஸ்திரீயுடன் அங்கே அவர் பேசிக் கொண்டிருக்கின்றாரே. நம்மை அவர் அனுப்பிவிட்டு, இங்கே இந்த சீர்கெட்ட அவப்பெயரையுடைய ஸ்திரீயுடன் உட்கார்ந்து கொண்டிருக்கின்றாரே' என்று நாம் நினைத்தோம் என்பது நினைவில் இருக்கின்றதா. நாம் புதர்களின் பின்னால் நின்று கொண்டு அவர்களுடைய உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தோமே, ஞாபகமிருக்கிறதா''. ''அவர் அவளிடம், 'ஸ்திரீயே நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா' என்று கூறினதை நாம் கேட்டுக் கொண்டிருந்தோம் அல்லவா?'' ''அப்பொழுது நாம், 'நல்லது, நாம் தவறாக நினைத்து விட்டிருப்போம், ஒரு வேளை இந்த ஸ்திரீ முறைப்படி திருமணம் செய்தவளாக இருப்பாள்' என்று கூறினோமே''. “அப்பொழுது அவள் திரும்பி அவர் முகத்திற்கு நேராக நோக்கி, 'ஐயா, எனக்கு எந்த ஒரு புருஷனும் இல்லை' என்று கூறினாள். ''நம்முடைய இருதயங்கள் எப்படி நின்று போனது என்பது உங்களுக்கு ஞாபகமிருக்கின்றதா? நாம் நம்பிக்கைக் கொண்டிருந்த நம்முடைய மகத்தான மேசியா ஒரு பொய்யில், வகையாக மாட்டிக் கொண்டார், எப்படியென்றால் ''போய் உன் புருஷனை அழைத்துக் கொண்டு வா“ என்று அவர் கூற, தனக்குப் புருஷன் இல்லை என்று அவள் திரும்பவும் சாட்சியளித்தாள். இப்பொழுது அது அவரின் மேலே திரும்பிவிட்டது என்று நாம் அப்படியே மலைத்து திகைத்துப் போய் நமக்கு மூச்சு நின்று போனதே, ஞாபகமிருக்கின்றதா?'' “ஆம் எனக்கு ஞாபகமிருக்கிறது'' ''பிறகு அடுத்து கூறப்பட்ட வார்த்தைகள் நினைவிருக்கிறதா? அவர் 'நீ உண்மையைக் கூறினாய், ஏனெனில் ஐந்து பேர் உனக்கு இருந்தார்கள்', இப்பொழுது நீ வாழ்ந்து கொண்டிருக்கின்ற அவன் உன்னுடைய புருஷன் அல்ல,'' என்றார். ஓ, “புதரின் பின்னால் நடந்த சாட்சி கூட்டம் உங்களுக்கு நினைவில் இருக்கின்றதா? என்னே''. பாருங்கள், நீங்கள் அவரை இக்கட்டான நிலையில் சிக்க வைக்க முடியாது. அவர் தேவன். ஓ, சீமோன் கூறினான், ''அது...'' அந்திரேயா கூறினான், “அது எனக்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் செய்துவிட்டது.'' 28பர்த்தொலோமேயு கூறினான், “பொறுங்கள், நானும் ஒரு சாட்சியைக் கூற விரும்புகிறேன். நான் அதைச் செய்யலாமா சகோதரரே?'' “ஓ, நல்லது , நீ தாராளமாகக் கூறலாம்; நமக்கு நிறைய நேரம் இருக்கின்றது. அவர் இன்னுமாக வரவில்லை, ஆதலால் நாம் மெல்ல சிறிது துடுப்பை இயக்குவோம். பர்த்தொலொமேயு நீ சாட்சியிடத்துவங்கு''. ''நல்லது, நான் கண்ட மகத்தான காரியங்களில் ஒன்று. எரிகோவின் ரெபெக்காள் என்கின்ற நம்முடைய சகோதரி உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?'' “ஆமாம்'', ''அவளுடைய புருஷனும் அங்கே ஒரு உணவு விடுதியை நடத்துகின்றான்''. ''ஹ-ஹம்'' ''அவன் ஒரு வாணிகத் துறையில் வாணிகம் செய்கிற வணிகனாக இருந்தான், அவனுடைய பெயர் சகேயு என்பதாகும்.'' ''ஆமாம், ஆமாம், நான் அவனை நன்கு ஞாபகத்தில் கொண்டுள்ளேன்.'' 29“உங்களுக்கு நினைவிலிருக்கின்றதா, அவள்... அவள் நம்முடைய சகோதரிகளில் ஒருவளாக இருந்தாள். அவள் கர்த்தர் பேரில் விசுவாசம் கொண்டவளாக இருந்தாள், சகேயுவும் இயேசுவை விசுவாசிக்காமல் இழக்கப்பட்டு போவானோ என்று அவள் மிகவுமாக பயந்திருந்தாள். ஆகவே, ஓ, சகேயு அங்கேயிருந்த ஆசாரியனுடைய மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்தான். ஆகவே அவனுக்கு ஏதாவதொன்று நடந்து அதினால் அவனுடைய கண்கள் திறக்கப்பட்டு, இவர்தான் அந்த போதகர் என்றும், இதுதான் நம்மிடையே மாம்சமாகி உறுதிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தை என்று அவன் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று அவள் ஜெபித்துக் கொண்டிருந்தாள். அந்த நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இருதயத்தின் ரகசியங்களை அறிந்திருப்பவர் என்பதையும், அவர்தான் அந்த வார்த்தை என்று காண்பித்துக் கொண்டிருந்தார் என்றும் நாம் அவளுக்கு - அவனிடம் கூற முயற்சித்துக் கொண்டிருந்தோம், ஏனெனில் நம்முடைய இருதயத்தில் உள்ளன சிந்தனைகளை வார்த்தை பகுத்தறிகின்றது.'' ''அவனோ, 'முட்டாள்தனம்', நான் ஆசாரியனைத்தான் விசுவாசிப்பேன். ஆசாரியன் என்ன கூறுகின்றாரோ, அதுவே எனக்கு போதுமானதாயிருக்கிறது!'' என்றான். ஏனென்றால் அவன் பட்டணத்தின் எல்லா முறைமைகளையும் சார்ந்தவனாக இருந்தான், கிவானிஸ் மற்றும் எல்லாவற்றையும் போன்றவை என்பது உங்களுக்கு தெரியும். ஆகவே அதற்காக அவைகளை விடுவதென்பது அவனுக்குக் கடினமான ஒன்றாக இருந்தது. ஆகவே ரெபெக்காள் நம்மெல்லாரையும் ஜெபம் செய்யும்படி கேட்டுக் கொண்டாள். ஒவ்வொரு முறையும் அவர் ஒரு தீர்க்கதரிசி என்ற பேச்சிற்கு நாம் வருவோமானால் அவன் 'முட்டாள்தனம்' - அவன் பெயல்செபூல் என்று ஆசாரியன் கூறுகிறார். அவன் ஒரு பிசாசு. பிசாசின் வல்லமையைக் கொண்டு அதைச் செய்கிறான். அவன் ஒரு மனோதத்துவவாதி மாத்திரமே. அது அவ்வளவேதான். அதில் ஒன்றுமே கிடையாது. ஆகவே அதைப் போன்ற ஒன்று இந்த நாளில் இல்லை, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நமக்கு தீர்க்கதரிசிகளே கிடையாது. ஆகவே எப்படி அந்த ஆள், ஐக்கியச் சீட்டு கூட இல்லாமல் அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க முடியுமோ? ஓ, அவன் அப்படிப்பட்டவனாக இருக்க வகையே கிடையாது என்பான்.'' 30''ஆனால், உங்களுக்குத் தெரியுமா, அவனுடைய மனைவி ரெபெக்காள் மிக உறுதியாக இருந்து ஜெபித்துக் கொண்டேயிருந்தாள். ஆகவே ஒரு நாள் காலை இயேசு பட்டணத்திற்குள் வந்து கொண்டிருக்கையில், நல்லது, அப்பொழுது சகேயு அவரைப் பார்க்க தெருவிற்கு சென்றிருக்கின்றான் என்று ரெபெக்காள் நமக்கு கூறினாள் என்பதைப் பார்க்கிறோம். அவர் ஒரு தீர்க்கதரிசி என்று அவன் விசுவாசிக்கவில்லை, ஆகவே அவன் 'நான் அவரை நன்றாகப் பார்ப்பேன்' என்று கூறினான். நாம் உணவு விடுதியில் சாப்பிடுகையில் எப்படி அவன் நமக்கு சாட்சி கொடுத்தான். ஆகவே அவன் ஒரு காட்டத்தி மரத்தின் மேல் ஏறி, ''என்ன தெரியுமா, நான் இங்கே மறைந்து கொள்கிறேன், ஆதலால் அவரால் என்னைக் காணமுடியாது. எப்படியாயினும், நான் ஒரு சிறிய ஆள், ஒரு குள்ளன். அங்கே அந்த ஜனக் கூட்டத்தில் அவரை என்னால் காணமுடியாது, ஆகவே இங்கே இருக்கின்ற மரத்தின் மீது நான் ஏறிக்கொள்வேன்“ என்றான். இரண்டு - இரண்டு கிளைகள் இணைந்திருந்த இடத்தில் ஏறினான், அங்கே இருகிளைகள் இணைந்திருந்த இடத்தில் அமர்ந்து கொண்டான்.'' உட்கார்ந்து கொண்டுஆராய்வதற்கு அது ஒரு அருமையான இடமாகும். அங்கேதான் இரண்டு வழிகள் சந்திக்கின்றன, உன்னுடையதும் தேவனுடையதும்; உன்னுடைய கருத்துக்கள். அதை நினைத்துப் பார்க்க அது அருமையான காரியமாகும். 31“ஆகவே அவன் கூறினான், 'உங்களுக்குத் தெரியுமா, அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்திருக்கக் கூடும். அவர் தீர்க்கதரிசியாக இருந்திருக்கலாம். ஒரு வேளை நான் தவறாயிருக்க வாய்ப்புண்டு. ஆகவே என்னவென்று உனக்கு கூறுகிறேன்; நான் அவரை நன்றாக பார்ப்பேன், என்னை அவருக்கு தெரியாது. ஆகவே நான் எல்லா இலைகளையும் எடுத்து இதைப் போன்று என்னைச் சுற்றி வைத்து விடுவேன், என்னை அவர் பார்க்கவே முடியாதவாறு என்னை மறைத்துக் கொள்வேன். அவர் இங்கே வரும் போது நான் அவரை உன்னிப்பாக கவனிப்பேன். அவர் ஒரு சரியான நபராக தென்படவில்லையென்றால், இந்த மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டு சிறிது, நான் அவருக்கு என் ஆலோசனையை அளிப்பேன்' என்றான். ஆகவே, அந்தத் தெருவின் சந்திப்பில் அவர் வருகையில் எட்டி அவரை பார்க்கும் படிக்கு ஒரு இலையை அவன் வைத்திருந்தான்.” “அவர் மூலையில் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு தெருவில் நடந்து வந்து கொண்டிருக்கையில், வியாதியாயிருந்த பிள்ளைகளுடன் ஜனங்கள் நின்றிருந்தனர், சீஷர்கள் 'சற்று தள்ளியிருங்கள்'. என்னை மன்னியுங்கள். சற்று பொறுத்துக் கொள்ளுங்கள், போதகர் மிகவுமாக களைத்துப் போயிருக்கிறார், கடந்த இரவு ஒரு பெரிய மகத்தான ஆராதனையை நடத்தினார். ஆகவே பெருந்தன்மையாக, தயவு செய்து நீங்கள் சற்று அப்புறமாக நின்று அவருக்கு வழிவிடுவீர்களா? என்ன, அவர் பட்டணத்திற்கு சென்று கொண்டிருக்கிறார், நீங்கள் தயவுகூர்ந்து சற்று தள்ளி நிற்கிறீர்களா?” என்று கூறிக் கொண்டிருந்தனர். சகேயுவும் அங்கே மரத்தின் மீது உட்கார்ந்து, “அவரை கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்...'' 32இயேசு நேராக மரத்தின் கீழ்வந்து, நின்று மேலே பார்த்து, ''சகேயுவே, அங்கிருந்து கீழே இறங்கி வா. இன்று இரவு ஆகாரம் உண்ண உன்னுடன் உன் வீட்டிற்கு நான் வருகிறேன்“ என்று கூறினார். “அது எனக்கு சந்தேகத்திற்கிடமில்லாமல் செய்தது. அவன் மேலே இருக்கிறான் என்றும், அவனுடைய பெயரையும், அவன் யாரென்பதையும் அவர் அறிந்திருந்தார். அவர்தான் மேசியா ஆகும். ஆம், ஐயா. ஏனெனில் மேசியா அதைச் செய்வார் என்று நமக்குத் தெரியுமே. நிச்சயமாக. ஆகவே அன்று இரவு ஆகாரத்திற்காக அவர் அவன் வீட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது. அது என்ன ஒரு மகத்தான சமயமாக இருந்தது. நாம் அதை நினைவில் கொண்டுள்ளோம்'' என்று கூறினான். 33உங்களுக்கு தெரியுமா, சாட்சி கூட்டம் நடந்து கொண்டிருந்த அந்த நேரத்தில், உங்களுக்கு தெரியுமா, அங்கே கடலின்மேல் இந்த சீஷர்கள் சாட்சியிட்டுக் கொண்டிருக்கையில், அங்கே வடபுறங்களில் இரவின் இருட்டான நேரமாக இருந்திருக்கும், அந்த சாத்தான் மலையின் மேல் ஏறி கீழே நோக்கிப் பார்த்திருக்க வேண்டும். அந்த சாட்சி கூட்டத்தில் அவர்கள் அவர் இல்லாமல் இருந்ததை அவன் நோக்கிப் பார்த்தான். அதுதான் அவனுடைய தகுந்த சமயமாக இருந்தது. பாருங்கள், அதே காட்சியானது திரும்பவுமாக, மறுபடியுமாக வந்துள்ளது என்று நான் நினைக்கிறேன். எழுப்புதலின் உணர்ச்சியார்வத்தினால் அவர் இல்லாமல் அவர்கள் சென்றுவிட்டனர். அது உலக முழுவதும் வேகமாக சென்றது. நாம் கண்ட இந்த மகத்தான எழுப்புதலிற்குப் பிறகு, இந்த குழப்பத்தின் மணி வேளையில், இன்று நமக்கும் அதுதான் சம்பவிக்கிறது என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு தேசமும் எழுப்புதல் அக்கினிகளை எழும்பக் கண்டு எரிந்தது, மகத்தான எழுப்புதல் ஆராதனைகள், ஆயிரமாயிரக்கணக்காக ஜனங்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டிருந்தது. ஆகவே அவர் செய்ததை சாட்சியிட்டுக் கொண்டு, “ஓ, அவர் இதைச் செய்ததை நாங்கள் கண்டோம், அதை அவர் செய்ததை நாங்கள் கண்டோம் என்று கூறிக் கொண்டு”, உணர்ச்சியார்வத்தினால் அந்த சீஷர்கள் செய்ததைப் போல, நாமும் அவர் இல்லாமல் சென்றுவிட்டோம் என்று நான் நம்புகிறேன். 34எழுப்புதல் அளித்திருந்த மகத்தான தருணங்களைக் கடந்து நாம் சென்று விட்டிருக்கின்றோம். நாம் அதிகப் பணம் சம்பாதிப்பதிலும், சபைகளும், மகத்தான பெரிய கட்டடங்கள் கட்டுவது, மகத்தான பெரிய இலட்சக்கணக்கான இடங்கள், மகத்தான பள்ளிக் கூடங்கள், கல்வி முறைமைகள், மற்றும் நம்முடைய ஸ்தாபன ரீதியான வளர்ச்சியிலும் இருக்க நாம் சென்றுவிட்டோம். பிறகு நம்முடைய கம்யூனிச திட்டங்கள், மற்றும் கம்யூனிசத்திற்கு எதிரானவைகள், அதை மாத்திரமே நாம் இன்றைக்கு பேசிக் கொண்டிருக்கிறோம். ஆகவே முதலாவதாக என்னவென்று உங்களுக்கு தெரியுமா, நம்முடைய கம்யூனிச எதிர்ப்பு திட்டங்களையும், நம்முடைய பெரிய ஸ்தாபன திட்டங்களையும், இன்னும் நம்முடைய ''மேலும் ஒரு லட்சம் இன்னும் மற்றவைகளையும், அவர்கள் கொண்டிருப்பதை சாத்தான் கவனித்திருக்கின்றான். அக்கினி மிகவும் மங்கி எரிகின்ற வரையில், நாம் பழைய கால ஜெப கூட்டங்களையும் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் திரும்பவுமாக வருவதையும் விட்டு நாம் சென்று விட்டிருக்கிறோம். நீங்கள் சத்தமிட்டு, ஜனங்கள் பீடத்தண்டை கொண்டு வர முயற்சிக்கலாம், அவர்கள் மரித்தவர்கள் போல வருவதற்கு பேரச்சம் கொண்ட ஒன்றாய் நடந்து வருவார்கள், ஆகவே பிறகு ''ஓ, என்னை ஏன் அவர் கூப்பிட்டார்“? அவர்களுடன் ஊழியக்காரர்கள் வந்து ஜெபிக்கும்படி கேட்கின்றனர், அவர்கள் அங்கு செல்கின்றனர், நீங்கள் அவர்களை ஏறக்குறைய கொள்ளவே முடியாது. அவர்கள் சிறிது நிமிடங்கள் அங்கே நின்று விட்டு உங்களை நோக்கி பார்த்து, பிறகு சென்று இருக்கையில் அமர்ந்து கொள்கின்றனர். என்னைப் பொறுத்த வரையில் அக்கினி அணைந்துவிட்டது. ஏதோ ஒன்று நடந்துள்ளது. கவனியுங்கள். நமக்கு தேவை என்னவெனில், பாவிகள் கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து, மனந்திரும்பி தங்கள் கரங்களை உயர்த்தி இரக்கத்திற்காக கதறிக் கொண்டு பீடத்தை நோக்கி ஓடி, தேவனுடைய மகிமையோடு முழு சபையும் அக்கினி பிழம்பாக இருப்பதேயாகும். 35நம்முடைய ஸ்தாபனங்களை வளர்க்க ஒரு தருணத்திற்காக உள்ள உணர்ச்சியார்வத்தினால், நாம் நம்முடைய ஊழியக்காரர்களுக்கு கல்வியறிவு அளித்து, அவர்கள் ஆரம்பத்தில் இருந்த நிலையில் இல்லாமல் தேவனிடமிருந்து மேலுமாக அவர்களை அப்புறம் கொண்டு செல்ல பெரிய பள்ளிகளை நாம் கட்டியுள்ளோம். கல்வியறிவினால் தேவன் அறியப்படமாட்டார். வேத சாஸ்திரத்தினால் அவர் அறியப்படமாட்டார். விசுவாசத்தினால் மாத்திரமே தேவன் அறியப்படுவார். நீ தேவனை விவரிக்க முடியாது. அவர் விவரிக்கப்படுவதற்கு அப்பாற்பட்டவர் ஆவார். அது என்ன செய்துள்ளது என்பதைக் கவனியுங்கள். ஒரு காலத்தில் பெந்தெகொஸ்தேயினராக இருந்த பெந்தெகொஸ்தே ஜனங்களாகிய நாம், நம்முடைய ஸ்திரீகள் தங்கள் மயிரைக் கத்தரித்து, ஒப்பனைப் பொருள்களை பூசிக் கொண்டிருக்கின்றனர். நம்முடைய ஆண்களும் அதை அனுமதித்துக் கொண்டிருக்கின்றனர். நம்முடைய ஊழியக்காரர்களும் அதை அனுமதித்துக் கொண்டிருக்கின்றனர். அதைக் குறித்து ஏதாவது கூற அவர்கள் பயப்படுகின்றனர். அவர்கள் அப்படி ஏதாவதைச் செய்தால் சபை அவர்களை வெளியே தள்ளிவிடும். ஓ, பிரசங்க பீடத்திலிருந்து அடித்தளம் வரை ஒரு வீட்டை சுத்தம் செய்தலான காரியமானது நமக்கு அவசியமில்லையெனில், அது வெட்கக்கேடு, அவக்கேடான ஒன்றாகும். 36சமீபத்தில் யாரோ ஒரு மனிதன் என்னிடம் வந்து, “சகோதரன் பிரான்ஹாம், ஜனங்கள் உங்களை நேசிக்கின்றனர். ஆனால் நீங்களோ எப்பொழுதும் அவர்களைக் கடிந்து கொள்கிறீர், ஸ்திரீகள் கத்தரித்த தலைமயிரைக் கொண்டிருப்பதைக் குறித்து மற்றக் காரியங்களைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொள்கிறீர்கள்'' என்று கூறினார். நான், “அவள் அதைக் கொண்டிருப்பது கனவீனமான ஒன்று என்று வேதாகமம் கூறுகிறது'' என்றேன். அவள் அவ்வாறு செய்கையில் தன் புருஷனை கனவீனம் பண்ணுகிறாள். நீ தேவனிடமிருந்து பிரிந்துவிட்டாய் என்பதற்கான நிச்சயமான அடையாளம் அதுவேயாகும். நினைவில் கொள்ளுங்கள், சிம்சோனின் காரியத்தில் நீண்ட மயிரானது, அவன் உலகத்திலிருந்து தேவனுடைய வார்த்தைக்குப் பிரிந்து வந்தான் என்னும் நசரேய அடையாளமாக அது இருந்தது. ஆகவே, ஸ்திரீகளே, நீங்கள் உங்கள் தலைமயிரை வெட்டுவீர்களானால், உங்கள் - அந்த நசரேய அடையாளத்தை நீங்கள் மறுதலிக்கின்றீர்கள். வேதத்திற்குப் பதிலாக ஹாலிவுட்டிற்கு நீங்கள் சென்று விட்டீர்கள். ''அவை சிரைக்கப்படக் கூடாது'' என்று வேதம் கூறியுள்ளது. பாருங்கள், “அது வெட்கக்கேடு, ஊழியக்காரர்களும் அதைக் குறித்து எதையுமே கூறுவதில்லை.'' 37இந்த மனிதன் என்னிடம், “நீங்கள் ஸ்திரீகளை மட்டும் கடிந்து கொள்ளாமல் இருந்தால் என்ன? அவர்கள் உம்மை ஒரு தீர்க்கதரிசியாக கருதுகிறார்களே'' என்று கூறினார். ''நான் ஒரு தீர்க்கதரிசியென்று ஒருபோதும் கூறினதில்லையே'' என்றேன். அவர், ''உம்மை அவ்வாறு அவர்கள் கருதுகிறார்கள். ஆவிக்குரிய வரங்களைப் பெற்றுக் கொண்டு ஏதாவதொன்றைச் செய்ய அவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாமே. நீர் அவர்களுக்கு பெரிய காரியங்களை மகத்தான காரிங்களை கற்றுத் தர வேண்டும்'' என்று கூறினார். நான், “அவர்களுக்கு ஏ.பி.சி (A,b,c) கூட கற்றுக் கொள்ள முடியவில்லையென்றால் எப்படி நான் அவர்களுக்கு அல்ஜீப்ரா சொல்லித்தர முடியும், அது எப்படி சீராக அமையும்? நீங்கள் எப்படி அதைச் செய்வீர்கள்? ஆம், “முதல் காரியத்திற்குச் செல்லுங்கள்'' என்றேன். வருடா வருடம், தேசமெங்கிலும் செல்கையில், அது இன்னும் மோசமாகிக் கொண்டே செல்கின்றது. ஏதோ ஒன்று எங்கேயோ தவறாயிருக்கின்றது; அது வார்த்தையில் இல்லை. எழுப்புதல் தீ நம்மிடையே இல்லை என்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. வீட்டை சுத்தம் செய்யும் காரியம் நமக்கு அவசியம். நாம் திரும்பி வரும் வரையிலும் தேவன் அதைச் செய்யவே மாட்டார். நமக்கு சுத்தம் செய்யும் நேரமானது தேவையாயிருக்கின்றது. 38ஆகவே ஆண்களாகிய நீங்கள், உங்கள் மனைவி அரைக்கால் சட்டைகளை மற்றும் அதைப் போன்ற காரியங்களைச் செய்ய அனுமதிக்கின்றீர்கள். அவர்கள் மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள் அல்ல. அது பெந்தெகொஸ்தேயினர்தான். அது சரி: லவோதிக்கேயா சபை காலம், தேவ பக்தியின் வேஷம் தரித்து அனலுமின்றி குளிருமின்றி, பெந்தெகொஸ்தே என்னும் பெயர் கொண்டதாக இருக்கின்றது, அவ்வளவுதான். பெந்தெகொஸ்தே என்பது ஒரு பெயரல்ல; அது ஜனங்களை சுத்தம் செய்யும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெறும் ஒரு அனுபவமேயாகும். நம்மால் மகத்தான சுகமாக்கும் ஆராதனைகளும் மற்ற காரியங்களையும் கொண்டிராமல் இருப்பதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை; எங்கோ ஏதோ ஒரு காரியம் தவறாயிருக்கின்றது. அது நாம் முயற்சித்து... சாத்தான் நம்மைக் கண்டான். ''நல்லது, நாங்கள் அதைக் குறித்து எதையாவது கூறினால், தங்கள் அங்கத்தினர் நிலையை மாற்றிக் கொள்வார்களே.'' நினைவில் கொள்ளுங்கள், கிறிஸ்தவர்களை நீங்கள் கொஞ்சி சீராட்டக் கூடாது. கிறிஸ்தவர்கள் கரடுமுரடானவர்கள். அவர்கள், யார் என்ன கூறினாலும் சரி, தேவனுக்காக நிற்கின்ற ஆண்களும் ஸ்திரீகளும் ஆவர். நீங்கள் அவர்களிடம் கெஞ்சவோ வற்புறுத்தவோ, ஆசை காட்டவோ, கொஞ்ச வேண்டிய அவசியமே இல்லை. அவைகளோ மக்கிப் புளித்த எருப்படுகையால் வெதுவெதுப்பாக்கப்பட்டுக் கண்ணாடியால் மூடப்பட்ட பாத்திகள், கலப்பினச் செடிகள்; அது நல்லதாவே இருக்காது; அவைகள் எதையுமே பிறப்பிக்காது. 39எனக்கு நினைவில் வருகின்றது,அது... கூடுகட்டும் நேரம் சமீபித்திருக்கிறது, அங்கேயிருக்கின்ற அந்த சிறு பறவைகள், சிறிய குருவிகள் தங்கள் கூடுகளுக்குள் வைக்கோலை வைத்துக் கொண்டிருக்கின்றன. அவைகள் கூடிய விரைவில் அடைகாத்து தங்கள் சிறிய முட்டைகள் பொரிக்கும்படி செய்கின்றன. உங்களுக்கு தெரியுமா, ஒரு சிறிய பறவை முட்டைகள் கொண்ட கூட்டை கொண்டிருக்க முடியும், அது முட்டைகளின் மேல் உட்கார முடியும், ஒவ்வொரு நிமிடத்திற்கும் அவைகளை திருப்பிக் கொண்டிருக்கும்; தன்னுடைய சிறு காலை எடுத்து அவைகளைத் திருப்பி, அவைகளின் மீது உட்காரும். இப்பொழுது, ஒரு விசை அனலாக்கிவிட்டு, பிறகு அந்த முட்டைகள் குளுமையாக அது விட்டுவிடுமானால், அவை பொரிக்காது. ஆகவே அது பறந்து ஒரு வாய் அளவு இரையை மாத்திரம் எடுத்துக் கொண்டு திரும்பவுமாக அவைகளின் மீது அமர்ந்து கொள்ளும். ஆகவே உங்களுக்குத் தெரியுமா, அந்த வயதான தாய்ப் பறவை, அது அந்த முட்டைகளின் மீது உட்கார்ந்து, இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை அவைகளைத் திருப்பி, அது கூட்டை விட்டு கிளம்ப முடியாத அளவிற்கு இரை தின்னாமல், தியாகம் செய்து, கூட்டை விட்டு பறக்க முடியாத அளவிற்கு பெலவீனமாகி, ஆனால் அந்த தாய்ப்பறவை ஆண் பறவையோடு தொடர்பு கொள்ளாமலிருக்கும் பட்சத்தில், அந்த முட்டைகள் பொரிக்காது. எவ்வளவுதான் அவைகளைக் கொஞ்சி சீராட்டினாலும் அவை பொரிக்காது. அது கூட்டில் அப்படியே இருந்து அழுகிப் போகும். 40ஆகவே துணைவராகிய இயேசு கிறிஸ்துவுடன் பெந்தெகொஸ்தெவிற்கு தொடர்பு கொள்ள சமயம் இருக்குமானால்; ஏனெனில் மற்றுமொரு அழுகின முட்டைகள் நிறைந்த கூட்டை நாம் பெற்றுக் கொள்கிறோம். விசுவாசத்தை மறுதலித்து, உலக சபை ஐக்கிய சங்கத்திற்குள் சென்று, போப் (Pope) பக்கத்தில் உட்காருவது ஒரு மகத்தான காரியம், அது ஆவிக்குரியது என்று கூறுவது, பெந்தெகொஸ்தே ஜனங்களாகிய உங்களுக்கு என்ன ஆயிற்று? அக்காரியங்கள் நடைபெறுமென்று வேதாகமம் உரைத்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரிந்திருக்கிறதா? மெத்தோடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும் உள்ளே வருகின்றதால் மற்றும் அதைப் போன்ற காரியங்களும் இருப்பதால்தான் நாங்கள் கூச்சலிடுகிறோம். உறங்கிக் கொண்டிருந்த கன்னிகை எண்ணை வாங்க வந்தபோது, அந்த அதே மணி நேரத்தில் மணவாளன் வந்தார் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா? அவர்கள் அந்த எண்ணையைப் பெற்றுக் கொள்ளவில்லை. மிக ரகசியமாக எடுத்துக் கொள்ளப்படுதல் வரும் என்றும், இந்த சமயங்களில் ஏதோ ஒன்றில் செல்லுதல், இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா, அது நடப்பது உங்களால் அறிந்து கொள்ளவே முடியாது. அது நடந்து முடிந்திருக்கும், என்ன நடந்ததென்று நீ வியப்படைந்து கொண்டிருப்பாய். 41யோவான் பூமியின் மேல் வந்தபோது. அவர்கள் அவரிடம், ''என்ன, அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்றுவேதம் கூறுகின்றதே'' என்று கேட்டனர். அவர், ''அவன் ஏற்கெனவே வந்து விட்டான், ஆனால் நீங்கள் அதை அறியவில்லை '' என்று கூறினார். அதே போன்று தான்; என்றாவது ஒருநாளில், ''இது உபத்திர காலத்திற்கு முன்பு சம்பவிக்கும் என்று நான் எண்ணினேனே. எடுத்துக்கொள்ளப்படுதல் சம்பவிக்கும் என்று நான் நினைத்தேன்'' என்று கூறுவார்கள். வார்த்தையானது, ''அது ஏற்கெனவே சம்பவித்துவிட்டது நீங்கள் அதை அறியவில்லை'' என்று திரும்பவுமாக வரும். ஆம். நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாக இருக்கும். ஓ, சபையே விழித்துக்கொள். நான் அதை நிறுத்துவது நல்லது. நான் இங்கே போதகத்திற்கு வரவில்லை; நீங்கள் அதை கொண்டிருக்கும் படிக்கு நான் அதை சிறிது ஆணித்தரமாக்க வேண்டுமென்று எண்ணினேன். 42நினைவில் கொள்ளுங்கள், சகோதரனே, ஒரு சபை இன்னொரு சபையைக் காட்டிலும் மேன்மையாக முயற்சிக்கிறது, எல்லா கல்வி அறிவு இல்லாமையை களைந்து அவர்களுக்கு உளவியல் பரிசோதனை செய்து ஒரு ஸ்தாபனம் மற்றொன்றை முந்த முயற்சிக்கின்றது; சாத்தான் இந்த பெரிய திட்டங்களைப் பார்த்துவிட்டான். ஆனால் சுவிசேஷ செயற்களம் செல்லும் முன்னர் ஒரு மனிதனை பரிசோதிக்க ஒரு உளவியல் நிபுணரை கொண்டிருக்கிறது: அது பெந்தெகொஸ்தே. இல்லை அது - அது - அது பிரஸ்பிடேரியன்கள் அல்ல; அது பெந்தெகொஸ்தேயினர் ஆகும். ஒரு குறிப்பிட்ட, பெரிய பெந்தெகொஸ்தேயினருக்கு, சுவிசேஷகர்கள் களத்திற்கு செல்லும் முன்னர் ஒரு உளவியல் பரிசோதனை அத்தியாவசிய காரியமாக உள்ளது. அதைப் போன்ற பரிசோதனை அவர்களுக்கிருந்தால் என்ன? அவர்கள் ஒரு பரிசோதனை கொண்டிருந்தனர். அது துவக்கத்திலே தேவனுடைய வல்லமை, அக்கினி உயரத்திலிருந்து வரும் வரை அந்த மேலறையிலே அவர்கள் காத்திருந்த போது அது ஒரு பெந்தெகொஸ்தே பரிசோதனை ஆகும். அதுதான் பரிசோதனை ஆகும். ஏதோ ஒரு உலகப் பிரகாரமான, பாதி - மது குடித்திருக்கின்ற உளவியல் நிபுணன் அங்கே நின்றுகொண்டு மனதை சிறிது பரவசப்படுத்த செய்ய முயற்சிப்பது, அல்லது ஏதோ ஒன்று, ''நீ முற்றிலும் மாற்றி செயல்பட்டுவிட்டாய்'' என்று கூறுவது அல்ல. முற்றிலுமாக ஆவிக்குரியவனாக இருக்கும் ஒரு மனிதன் நரம்பு தளர்ச்சியுடையவனாக இருக்கிறான் என்று அது சரியாக நிரூபிக்குமானால், அதனுள் செல்ல அவன் அப்படிப்பட்ட நிலையில்தான் இருக்கவேண்டும். ஆகவே அதுதான். அநேக வருடங்களாக தேவன் செய்ய முயற்சித்ததை இவர்கள் குழப்பிக் கொண்டிருக்கின்றனர் என்பதைப் பாருங்கள், பிறகு தங்களுடைய திட்டங்களுடனும் வருகின்றனர், தங்கள் மகத்தான... 43அநேக மக்கள் கூடி வருவதைப் பார்த்து அவர்கள் ஆர்வம் கொள்கின்றனர். ''நான் அவர்கள் எல்லாரையும் அசெம்பிளீஸ்களாக ஆகும்படி செய்தால், நான் அவர்கள் எல்லாரையும் ஒருத்துவக்காரர்களாக ஆகும்படி செய்வேனானால், நான் அவர்கள் எல்லாரையும் மெத்தோடிஸ்டுகளாக்கும்படி செய்தால்'' என்று கூறுவர். மெத்தோடிஸ்டுகளோ அவர்கள் எல்லாரையும் மெத்தோடிஸ்டுகளாக்க முயற்சிக்கின்றனர், பாப்டிஸ்டுகள் அவர்கள் எல்லாரையும் பாப்டிஸ்டுகளாக்கும்படி முயல்கின்றனர், பெந்தெகொஸ்தேயினர் எல்லாரையும் பெந்தெகொஸ்தேயினராகும்படி முயல்கின்றனர். ஓ, அதைக்குறித்து உங்களால் எதுவுமே செய்ய முடியாது; தேவன் அவைகளை உலகத்தோற்றத்திற்கு முன்னரே நியமித்துவிட்டார். நாம் சுவிசேஷத்தை பிரசங்கித்தாக வேண்டும். அவ்வளவுதான். நாம் நம்முடைய பெரிய திட்டங்களில், அந்த அக்கினி இல்லாமல் நாம் சென்றுவிட்டோம். கடந்து சென்று, இருந்தவாறே நம்முடைய சொந்த அக்கினியை நாம் உருவாக்கிக்கொண்டோம். 44ஆகவே கம்யூனிசம், கம்யூனிசம் வந்துவிட்டது “என்ன நடக்கப் போகின்றது?'' என்று மிகவும் பயந்து போய் இருக்கிறோம்? ஆனால், உங்களுக்குத் தெரியுமா, அந்தப் பெரிய காரியம் கம்யூனிசம் அல்ல. அதை நான் உங்களுக்கு கூறுவேனாக; நான் கம்யூனிசத்தைப் பார்த்து பயப்படுவதில்லை. ஆனால் பெந்தெகொஸ்தேயினராகிய உங்களை, இந்த உலக சபை ஐக்கியங்களில் சங்கம் எடுத்துக் கொள்ளப் போகின்றதே, அதைப் பற்றிதான் நான் பயப்படுகிறேன். அதுதான் காரியமாகும். அது மிருகத்தின் முத்திரையைத் தரித்துக் கொள்ளப் போகின்றது, நீங்களும் அதற்குள் செல்லத்தான் போகிறீர்கள். ஏனென்றால் நீங்கள் ஒரு ஸ்தாபனமாயிருக்கின்றீர்கள், நீங்கள் உள்ளே செல்லவேண்டும் அல்லது வெளியே செல்லவேண்டும். அதுதான் காரியம். ஆகவே எந்த ஒரு புத்தியுள்ள, ஆவிக்குரிய நபரும் அதை அறிந்திருக்கிறான். இன்னுமொரு கடலின் மேலான சாட்சி நமக்கு தேவையாயிருக்கிறது. ஆகவே நாம் இப்பொழுது பார்க்கிறோம். ஆகவே நம்முடைய பெந்தெகொஸ்தேயினரும், தூண்டில் முள், தூண்டில் கயிறு மற்றும் தூண்டில் பளுவை விழுங்கிக் கொண்டு “அது என்ன ஒரு மகத்தான காரியமாக இருக்கப்போகின்றது,'' என்கின்றனர். மெத்தோடிஸ்டு, பிரஸ்பிடேரியன், லூத்தரன், கிறிஸ்துவின் மற்றும் பெந்தெகொஸ்தேயினரும், நீங்களும் அங்கே அதினுள் இருக்க வேண்டுமென்றால், உங்களுடைய மகத்தான அப்போஸ்தல உபதேசத்தை மறுதலித்து - மறுதலித்து ஆக வேண்டும். அவர்கள் அதையேதான் செய்ய வேண்டும். அதினுள் செய்ய ஒன்றுமே உங்களுக்கு கிடையாது. சரியாக நிருபிக்கப்பட்ட விதத்தில் அவை எல்லாம் ரோமாபுரியுடன் சேர்ந்து கொண்டிருக்கின்றன. வேதாகமம் அவ்வாறு கூறியிருக்கின்றது. 45மக்களை எச்சரிக்காமல் காரியங்கள் இந்த விதமான நிலையை அடைய விட்டுவிட்ட இந்த பிரசங்கிகளின் கதி என்ன? தேவன் அவர்களிடம் கணக்கு கேட்பார். சரியாக இந்த சிக்கலின் நேரத்தில், அவர்கள் சிக்கலில் இருக்கின்றனர்; அவர்கள்தான். கம்யூனிசம் வருவதில்லை; அந்த முழு கூட்டத்தையும் உலக சபை ஐக்கியங்களின் சங்கம்தான் விழுங்கப் போகிறது. ஆகவே நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ''நல்லது, அது நடக்கும் போது...“ என்று கூறுவீர்களானால், அது மிகவும் காலதாமதமாகிவிட்டது; நீங்கள் மிருகத்தின் முத்திரையைப் பெற்று விட்டிருப்பீர்கள். பிறகு நீங்கள் அதைச் சேர்ந்தவர்களாகி விடுகிறீர்கள். அதிலிருந்து இப்பொழுது உங்களால்... உங்களால் எங்கே செல்ல முடியுமோ அங்கே சென்றுவிடுங்கள் (ஆம், ஐயா) தேவனுடைய இராஜ்ஜியத்தில் முத்தரிக்கப்படுங்கள். கிறிஸ்துவின் சரீரமாகிய காணக்கூடாத கிறிஸ்துவின் சரீரத்தில், அதற்குள் சேருவதல்ல, அதற்குள் உரையாடிச் செல்வதல்ல, அதற்குள் அந்நிய பாஷைகளில் பேசிச் செல்வதல்ல, அதற்குள் சத்தமிட்டு செல்லுவதல்ல; அது அதற்குள் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பண்ணப்படுவதாகும். நீங்கள் அதினுள் பரிசுத்த ஆவியினால் பிறக்கின்றீர்கள். அது சரி. நிச்சயமாக. 46இப்பொழுது, இந்த காரியங்களை நாம் கவனிக்கையில், சிக்கல் திடீரென்று வந்துவிடுகின்றது. ஓ, பிசாசு பார்த்து, ''ஹ-ஹம், அவர்கள் வெறியெழுச்சியில் (tantrum) சென்றுவிட்டிருக்கின்றனர், அங்கே அவர்கள் மேலும் கீழுமாக குதித்து சத்தமிட்டுக் கொண்டு, ஒரு பெரிய சமயத்தைக் கொண்டிருக்கின்றனர். என்ன தெரியுமா? அவர்களைக் கடலில் மூழ்க செய்துவிட சரியாக இப்பொழுதுதான் என்னுடைய நேரமாயிருக்கிறது. நான் அவர்களை சரியாக இப்பொழுது பிடிப்பேன்“ என்றான். ஆகவே அவன் மலையின் மீது ஏறி, வியூ, ''அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. இந்த ஜனங்கள் நரம்பு தளர்ச்சி கொண்டிருப்பவர்கள் மாத்திரமே ஆவர். நான் நினைக்கிறேன், வெளிநாட்டு களங்களுக்கு செல்லும் முன்னர் இவர்கள் “ஒரு - ஒரு - ஒரு மனப் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்ற தன்னுடைய விஷ சுவாசத்தை ஊதத் துவங்கினான்.'' பெந்தெகொஸ்தெயினர்... வார்த்தையைக் கொல்லுகின்ற அவனுடைய விஷ சுவாசத்தைப் பாருங்கள். “ஓ, அது வேறே ஏதோ ஒன்று என்று நான் நினைக்கிறேன்; நான் - நான் அதை நம்புகிறேன்” பாருங்கள், மற்ற எல்லா ஸ்தாபனங்கள் செய்தததைப் போலவே அதேவிதமாக செய்வது, சரியாக அந்த வழியில் தான் அவர்கள் நடந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள்... அது அதைக் கொல்லுகின்றது. நீ அதை ஸ்தாபனமாக்குகிற அதே மணி நேரத்தில், அது அதைக் கொல்லுகின்றது. அது எப்பொழுதும் அவ்வாறேதான். இனியும் அவ்விதமாகதான் இருக்கும். அது மறுபடியுமாக எழும்பாது. அது வரலாற்றில் அவ்விதமாக அறியப்படவேயில்லை. ஆகவே இந்த லவோதிக்கேயா சபைக் காலத்தில், கிறிஸ்து சபைக்கு வெளியே இருந்து கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவர்களால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. அதை அவர்களால் கேட்க முடியாது. இப்பொழுது, நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மணிநேரத்தில்; சிக்கலானது ஆரம்பித்துவிட்டது என்று நாம் காண்கிறோம் 47ஆகவே முன்பு இருந்தவாறு அற்புதங்கள் நடைபெறுவதில்லை என்று நாம் கண்டுகொள்ள ஆரம்பிக்கின்றோம். வியாதியஸ்தர்கள் வியாதியஸ்தர்களாகவே வீடு செல்கின்றனர். அது தேவனால் ஆனதல்ல. ஏனென்றால் ஜனங்களிடையே எழுப்புதல் இல்லாததுதான் அதன் காரியமாயிருக்கின்றது. எழுப்புதலே இல்லை. அவர்கள் - அவர்கள் உட்கார்ந்து, கேட்டுவிட்டு வீட்டிற்குச் சென்று ''நல்லது, அது மிக நன்றாக இருந்தது என்று நான் ஊகிக்கிறேன்'' என்கின்றனர். ஹ ஹம். பாருங்கள்? ஆர்வம் என்பதே இல்லை. ஜனங்களுக்குள் இருக்கவேண்டிய அந்த ஏதோ ஒன்று அங்கே இல்லை. 48எனக்கு நினைவில் இருக்கின்றது, பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இங்கே அர்க்கன்ஸாசில், அங்கே ஜோனேஸ் போரோவில் நான் ஒரு சிறிய கூட்டத்தை நடத்தினபோது, பதினைந்தாயிரம் பேர்கள் கொண்ட நகரத்திற்கு சுமார் நாற்பதாயிரம் மக்கள் பங்கு கொள்ள வந்து கொண்டிருந்தனர். அவர்கள் பஞ்சு வண்டிகளுக்கு கீழேயும், மற்ற எல்லாவற்றிற்கும் கீழே படுத்து கொண்டிருந்தனர். அவர்கள் உள்ளே வருவதற்காக மாத்திரமே வியாதியாயிருந்த பிள்ளைகள் மீது காகிதங்களை பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருக்கைகளில் உட்கார்ந்து கொண்டு இரவும் பகலும் அங்கேயே அதை விடாமல் இருந்து, தங்கள் அன்பானவர்கள் வெளியே சென்று ஹாம்பர்கர், மற்றும் ஒரு - ஒரு பாட்டில் சோடா வாங்கி வரச் செய்வார்கள். இரவும் பகலும், இரவு பகலும் அங்கேயே இருப்பர். அவர்களுடைய இருதங்கள் அக்கினியால் எரிந்து கொண்டிருந்தன. தேவன் ஒரு சிறு காரியம் செய்தால் கூட, அது அவர்களை அனல்கொள்ளச் செய்தது. ஆகவே அவர்களில் நூற்றுக் கணக்கானவர்கள் உள்ளே வந்தனர். பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இருந்த அவர் இன்றிரவும் இன்னுமாக அதே தேவனாக இருக்கின்றார். 49வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த போது இருந்த அவர் இன்றிரவும் இன்னுமாக அதே தேவனாக இருக்கின்றார். ஆனால் அது என்ன? நாமெல்லாரும் வெறியார்வம் கொண்டு ஸ்தாபனங்களைக் கட்டவும், இதைக் கட்டவும், அதைக் கட்டவும், பளபளப்பாகவும் பெரியதாகவும் ஏதோ ஒன்றைச் செய்து, அதை ஜோன்ஸினுடையதுடனும், மெத்தோடிஸ்டுகளுடனும், பாப்டிஸ்டுகளுடனும், பிரஸ்பிடேரியனுடனும் நாம் ஒத்திட்டுப் பார்க்க விரும்புகிறோம். நீங்கள் அவர்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. இல்லை, நீங்கள் அல்ல. அவர்கள் ஸ்தாபன ஜனங்கள், அது சரி, அவர்களுக்கெதிராக ஒன்றுமில்லை. அவர்கள் மத்தியில் அநேக அருமையான கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர், ஆனால் அந்த அவிசுவாசிக்கின்ற குழுக்களுடன் நீங்கள் இணைத்துக் கொள்ளக் கூடாது. பலனை மறுதலிக்கின்ற அந்த ஜனங்கள், நீங்கள் அவர்களுடன் சேர்ந்து ஆதரிக்கக்கூடாது. 50உங்களுக்குத் தெரியுமா, தொல்லை என்னவெனில், நீங்கள் ஹாலிவுட்டை சபைக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் செய்து கொண்டிருக்க வேண்டியதென்னவெனில் ஹாலிவுட்டை சபையிலிருந்து வெளியே தள்ள முயற்சித்துக் கொண்டிருத்தலே ஆகும். பாருங்கள்? நீங்கள் உங்கள் கட்டடத்தை மிக அழகாக ஆக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள்; அது மக்களின் கவனத்தை ஈர்க்கின்ற அளவிற்கு உங்கள் ஸ்தாபனத்தை மிகப் பெரியதாக்க முயற்சிக்கின்றீர்கள். அவர்கள் பட்சமாக நம்மால் போக முடியாது. அவர்கள் நம் பட்சத்தில் இருக்கும்படியாக நாம் செய்ய வேண்டும். எல்லாக் காரியமும் பளபளப்பாக இருக்கின்றன, நினைவில் கொள்ளுங்கள், உலக காரியங்களினால் ஹாலிவுட் பளபளக்கிறது, சுவிசேஷமோ எளிமையில் ஜொலிக்கிறது. பளபளத்தல், ஜொலித்தல் இவை இரண்டிற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. சுவிசேஷம் அடக்கத்திலும் சாந்தத்திலும், தாழ்மையிலும், வல்லமையிலும் ஜொலிக்கின்றது. ஹாலிவுட் பளபளக்கையில், ஒவ்வொருவரும் மகிழ்ச்சி குரல் எழுப்பிக்கொண்டு கூச்சலிட்டுக் கொண்டு அதற்குச் செல்கின்றனர். பாருங்கள்? நமக்கு அது தேவை இல்லை. 51நாம் இப்பொழுது இவ்விதமாக ஜீவிக்க விரும்புகிறோம்; அவர் கூறினார். ''நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், அது தான் சுவிசேஷத்தில் இருக்கின்ற பெலன் ஆகும். அந்த மெதோடிஸ்டு, பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன் மற்றும் அவர்கள் எல்லாரும் வர விரும்பும் அளவிற்கு நம்முடைய சபைகளில் ஏதோ ஒன்று அசைய நாம் கொண்டிருக்க வேண்டும். நாம் மிகவுமாக உப்பாக இருக்க வேண்டும். உப்பு தாகம் கொள்ளச் செய்கிறது, தாகத்தை உண்டாக்குகின்றது. உப்பானது தொடர்பு கொள்ளுமானால் அதற்குத் தனிச் சுவைத் திறம் இருக்கின்றது. அதனுடன் தொடர்பு கொள்ளப்பட வேண்டும். ஆகவே நாம் காண்பதென்னவென்றால், நம்முடைய மகத்தான வெறியெழுச்சிகளை, மெத்தோடிஸ்டுகளுடனும், பாப்டிஸ்டுகளுடன், பெரிய கட்டடங்களுடனும், பெரிய இடங்களுடனும், அருமையான கல்வியறிவுள்ள மக்களுடனும், மகத்தான பள்ளிகளுடனும், பெரிய கல்லூரிகளுடனும், அதைப்போன்ற ஒவ்வொன்றுடனும் ஒத்திட்டுப் பார்க்க விரும்புகிறோம். நாம் ஒரு வெறியெழுச்சியில் சென்றுவிட்டோம். ஆகவே இங்கே தொல்லையானது ஆரம்பித்துவிட்டது. ஆகவே ஆவிக்குரிய மனதானது சுற்றும் முற்றும் பார்த்து, ''இங்கே, ஒரு நிமிடம் இங்கே இரு, அந்த உலக சபை ஐக்கிய சங்கத்தில் நாம் எல்லாரும் சேரப் போகிறோமா? நம்முடைய முழு குழுவும் அதில் போகுமா?'' என்று கூறும். நிச்சயமாக, நீங்கள் செல்லப் போகிறீர்கள். அது சரி. இல்லையென்றால் நீங்கள் கவனித்துப் பாருங்கள். நீங்கள் அவ்வாறு செய்வீர்கள் என்றும், கிறிஸ்து வெளியே இருப்பார் என்றும் வேதாகமம் கூறியிருக்கின்றது. அன்றைய முந்தின இரவு போப்பிற்கு முன்பாக (ரோமிற்கு சென்ற முதல் போப்) சந்திரன் தன்னையே இருளாக்கிக் கொண்டு, வானத்தில் உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காண்பித்தது. முன்னதாகவே கூறப்படவில்லை, ஆனால் அது நடந்தது. இன்றைய நாளில் கர்த்தர் எவ்வளவாய் காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார், அவை அதிசயமானவை. 52ஆகவே அந்த அடர்ந்த இருள் சூழ்ந்த மணிநேரத்தில், அவர்கள் அங்கே இருந்தபொழுது காற்றடிக்க ஆரம்பித்தது. தப்பிக்க முடியும் என்ற எல்லா நம்பிக்கையும் அற்றுப்போனது. இப்பொழுது, உங்கள் ஸ்தாபனம் உலக சபைகளின் சங்கத்திற்குள் சென்றுவிட்டால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? இங்கே பூமியில் நாம் கட்டியுள்ள இந்த நம்முடைய மகத்தான காரியங்களுக்கு ஆகப்போவது என்ன, கடைசி நம்பிக்கை அற்றுபோனதா? ஆனால் உங்களுக்குத் தெரியுமா, எல்லா நம்பிக்கைகளும் அற்றுப்போனது; அவர்கள் காப்பாற்றப்பட முடியாது; ஆகவே அவர்கள் கூச்சல் போட ஆரம்பிக்கும் முன்னர் திடீரென்று, அவர் தண்ணீர் மேல் நடந்து வருவதை அவர்கள் கண்டனர். இருள் சூழ்ந்திருந்த மணி நேரத்தில் அவர் நடந்து வந்தார். 53என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அவர் அவர்களை விட்டுச் செல்கையில், என்ன நடக்கப் போகின்றதென்று அவர் அறிந்திருந்தார், ஆகவே அங்கே அத்தேசத்தில் இருந்த உயர்ந்த மலையின் மேல் அவர் ஏறினார். எவ்வளவு மேலே நீ செல்கின்றாயோ, மேலும் உன்னால் காணமுடியும். ஆகவே அவர்களை கவனித்துப் பார்க்கவேண்டும் என்பதற்காக அவர் மேலே ஏறினார். உங்களுக்கு தெரியுமா... இது வரப் போகிறதென்று அவருக்கு தெரியும். இந்த நாள் இப்படியிருக்கும் என்று அவர் முன்னுரைத்திருக்கின்றார். “சோதோமின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்,'' மனுஷகுமாரன் வெளிப்படுகையில் - அப்பொழுது அந்த குமாரன் வெளிப்படுத்தப்பட வேண்டும். இந்த பொல்லாத விபசார சந்ததியார் அடையாளத்தைத் தேடுவார்கள். ஆகவே அது ஒரு அடையாளத்தைக் கொண்டிருக்கும். அன்று அவர்கள் செய்தது போலவே இதுவும் அதைப் புறக்கணிக்கும், ஆனால் அது உயிர்த்தெழுதலின் அடையாளமாக இருக்கும். அவர் அன்று செய்ததைப் போல இன்னுமாக அவர் உயிரோடிருந்து செய்து கொண்டிருக்கிறார். 54நாம் காண்பதென்னவெனில், அந்த பயங்கர மணி நேரத்தில், அந்த எல்லா சீஷர்களும் ஆபத்திலிருக்கையில், அவர்களை கவனித்து பார்க்கத் தக்கதாக அவர் ஏறிச் சென்றார். அங்கே மலையின் மீது அவர் உட்கார்ந்து அவர்களை கவனித்துக் கொண்டிருந்தார். ஆனால் இப்பொழுது, இந்த முறை அவர் ஒரு மலையின் மீது ஏறவில்லை, ஆனால் கல்லறையிலிருந்து அவர் ஏறினார், காற்றின் வழியாக சந்திரன், நட்சத்திரங்களையும் கடந்து மிக உயரமாக வானத்தைக் கீழே நோக்கிப் பார்க்கின்ற அளவிற்கு மிக உயரத்தில் ஏறிச் சென்றார். ஆகவே அங்கே உயரத்தில் அவர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இப்பொழுது, அவருடைய கண்கள் ஒரு குருவியின் மீது நோக்கமாயிருக்கிறது, அவர் நம்மை கவனித்துக் கொண்டிருக்கின்றார் என்பதை நான் அறிவேன். அவர் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார். 55ஆகவே இருள் சூழ்ந்த இந்த மணிநேரத்தில், சபைகளெல்லாம் மகத்தான திட்டங்களுக்குள் சென்றிவிட்டிருக்கையில், இந்த திட்டம், அந்த திட்டம் என்று அவர்கள் கொண்டிருக்கின்றனர், ஸ்தாபனங்கள் மற்ற சபைகளைப் போல எல்லாம் திட்டம் தீட்டப்பட்டுள்ளன. ஆகவே என்ன நடந்தது? இருளான மணிநேரத்தில், உண்மையாக ஆவிக்குரிய - நிரப்பப்பட்ட ஜனங்கள், “என்ன நடக்கப் போகின்றது? என்னுடைய பிள்ளைகளை பாருங்கள்'' என்று ஆச்சரியமுறுவர். அந்த மனிதன், ”என்னுடைய மனைவியைப் பாருங்கள், இதைப் பாருங்கள்'' என்று கூறுவார். அவர்கள் ஞாயிற்றுக் கிழமை அல்லது புதன்கிழமை இரவு ஜெப கூட்டத்திலிருந்து சீக்கிரமாக சென்றுவிடுகின்றனர், ஏனென்றால் தொலைக்காட்சியில் ''நாங்கள் சுசியை நேசிக்கிறோம்'' மற்றும் அதைப் போன்ற ஒன்றை பார்க்கச் செல்கின்றனர்: அவர்கள் தேவனை அதிகமாய் நேசிக்கிறவர்களாய் இராமல் உலகப் பிரியர்களாய் அவர்களைப் போன்று நடந்து கொண்டிருக்கின்றனர். 56முன்னொரு நாளிலே தன் உடையை மிக இறுக்கமாக அணிந்திருந்த ஒரு ஸ்திரீயிடம் நான் “சகோதரியே அந்த உடை மிக இறுக்கமாக உள்ளது. அதை நான் உம்மிடம் கூறுவது நன்றாக தென்படாது, ஆனால் அது அவ்விதம் உள்ளது. நீங்கள் ஒரு கிறிஸ்தவர், நீர் ஒரு இடறலாய் ஆகிவிடுவீர்கள்'' என்றேன். அவள் “நல்லது, சகோதரன் பிரான்ஹாம், என்னவென்று உங்களுக்கு தெரியுமா? இதைப் போன்றுதான் அவர்கள் தயாரிக்கின்றனர்” என்றாள். நான், ''அவர்கள் இன்னுமாய்ப் பொருட்களை விற்கின்றார்கள், தையல் இயந்திரங்களும் அவர்களிடம் இருக்கின்றதே. ஆகவே சாக்குப்போக்கு சொல்லமுடியாது'' என்றேன். ஆம். கவனியுங்கள், என்னுடைய அருமை நண்பனே, உங்களுக்கு ஒன்றை நான் கூறட்டும்; உங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இல்லை, ஐயா. தொந்தரவிலிருந்து உங்களை அப்பால் வைக்க நான் விரும்புகிறேன். அந்த ஆவி உங்களில் நிலைத்திருக்கும் வரையில் நீங்கள் அதைச் செய்யத்தான் போகிறீர்கள். அது சரி. நீங்கள் அதிலிருந்து வெளியே பிறக்க வேண்டும். இப்பொழுது இந்த காரியத்தின் பேரில் உங்களை நீங்கள் பொருத்திக் கொள்ளலாம். ஆனால் உங்களிடம் நான் ஒன்றைக் கூறட்டும் (பாருங்கள்?) ''உங்கள் இருதயம் என்னவோ, அங்குதான் உங்கள் பொக்கிஷமும் இருக்கும்''. 57நான் உங்களுக்கு கூறட்டும்; நீ உன் கணவனுக்கு லீலி புஷ்பத்தைப் போல தூய்மையாக இருக்கலாம், நீ உன்னுடைய சிநேகிதப் பையனுக்கு, ஒரு வாலிபப் பெண்ணாக லீலியைப் போலவே தூய்மையாக இருக்கலாம், ஆனால் ஒரு நாளில் விபசாரம் செய்ததற்காக நீ பதில் கூறும்படி தேவன் உனக்குச் செய்யப் போகின்றார். நீ அவ்விதமாக உடை உடுத்துகையில் நீ குற்றவாளி ஆகின்றாய். இயேசு “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று” என்றார். பாவியாகிய அந்த மனிதன் உன்னை நோக்கி பார்த்ததற்காக, விபசாரம் செய்ததற்காக பதில் கூற வேண்டியதாயிருக்கும் பட்சத்தில், யார் அவனுக்கு முன்பாக தன்னைக் காண்பித்தது? அதைக் குறித்து சிந்தியுங்கள். பெந்தெகொஸ்தே ஸ்திரீகளே, உங்களுக்கு அவமானம். உங்களுக்கு வெட்கக்கேடு நான் உங்களை நேசிக்கிறேன், அதன் காரணமாகத்தான் நான் அதைக் கூறுகிறேன். அன்பு திருத்துகிறதாயிருக்கிறது. 58நாம் ஒரு மகத்தான வெறியெழுச்சியில் இருக்கின்றோம், ஒரு பெரிய ஆடை வெறியெழுச்சி. அது உலகத்தைப் போன்ற ஒரு நாகரீக பாணி ஆகும். அவர் “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள், அப்படி செய்தால் உங்களிடத்தில் தேவனுடைய அன்பு இல்லை,'' என்று கூறினார். ''நீங்கள் எவ்வளவு தான் அந்நிய பாஷைகளில் பேசினாலும், மேலும் கீழும் குதித்தாலும், நடனமாடினாலும் எனக்குக் கவலையில்லை, மயிரைக் கத்தரித்து, அதைப் போன்றஆடைகளை உடுத்தி, மனிதராகிய நீங்கள் அதை அனுமதிக்கின்றீர்களானால், உங்களுடைய சொந்த கனிகள் நீங்கள் எதிலிருக்கிறீர்கள் என்று கூறும். அது முற்றிலும் சரி. கம்யூனிசக் காற்றுகள், சபைக் கோட்பாடு காற்றுகள், உலக சபைகள், ஐக்கிய சங்க காற்றுகள், ஆகிய இவற்றில் நாம் இருக்கின்ற இப்படிப்பட்ட ஒரு குழப்பத்தைக் குறித்து ஆச்சரியமடைய ஒன்றுமில்லை. இது ஒரு... இது ஒரு ஒன்று சேர்க்கின்ற நேரமாக இருக்கிறது. தொழிற்சங்கங்கள் உழைப்பை ஒருங்கிணைத்துக் கொண்டு, அதைக் குறித்து குழப்பம் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. தேசங்கள் ஐக்கிய நாடுங்கள் அமைப்பைக் கொண்டிருக்கின்றன, அவை ஒன்று சேர்ந்துக் கொண்டிருக்கின்றன. சபைகள் ஒன்றாக இணைந்து கொண்டிருக்கின்றன. அவையெல்லாம் எதைக் காண்பிக்கின்றன. அது கிறிஸ்துவும் மணவாட்டியும் ஒன்றாக இணையப் போகின்றனர் என்பதைக் காண்பிக்கின்றது. அதைக் குறித்துதான் அவை பேசுகின்றன. இந்த காரியங்களின் நிழல்கள், நிழற்பட நேர்வடிவத்தை ஒத்த உருவப்படம் வரப் போகின்றதை காண்பிக்கின்றது. 59நான் அதிகம் நேரம் எடுத்துக் கொண்டேன். இப்பொழுது நாம் முடிக்கையில் கூர்ந்து கவனியுங்கள், ஆகவே இப்பொழுது, கவனியுங்கள். தப்பித்துக் கொள்ள முடியும் என்கிற எல்லா நம்பிக்கையும் அற்றுப்போன அந்த பயங்கரமான மணி நேரத்தில், யாரோ ஒருவர் தண்ணீரின் மீது நடந்து வந்து கொண்டிருந்தார். ஆகவே அந்த காரியம், சோகமான பகுதி எனவே... கூர்ந்து கவனியுங்கள். அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அந்த ஒரே காரியத்தைப் பார்த்து அவர்கள் பயந்தார்கள். அவர்கள். ''அது ஒரு ஆவியைப் போல் காணப்படும் கிறதே. உங்களுக்கு தெரியுமா அது ஒரு ஆவியாக இருக்கும்'' என்றனர். அது மறுபடியுமாக நடந்துள்ளதா? அவர்கள் அதைக் குறித்து பயப்படுகின்றனர். இந்த நாளில் அது அவ்வாறு நடக்கும் என்று இயேசு கூறியிருக்கையில், அவர்கள் அதை குறி சொல்லுகிற ஒன்று என்று பயப்படுகின்றனர், ஏதோ ஒருவிதமான பிசாசு வல்லமை என்று நீங்கள் பயப்படுகின்றீர்கள். அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய ஒரே ஒருவர் இயேசு கிறிஸ்து மாத்திரமே, இன்னொரு ஸ்தாபனம் அல்ல, எல்லாரும் ஒன்றாக சேருவதனால் மாத்திரம் அல்ல; அது இன்னும் அதை முன்பு எப்பொழுதும் இல்லாத விதத்தில் மிக மோசமாக ஆக்கப் போகின்றது. உங்களுக்கு உதவி செய்யக்கூடிய ஒரே ஒருவர் இயேசு கிறிஸ்து மாத்திரமே. 60ஆகவே கடைசி நாட்களில் இந்த உருவில் அவர் திரும்பவுமாக வந்து இதைச் செய்வார் என்று வாக்குத்தத்தம் செய்தபொழுது, (முதலாம் வித்தாகிய, ஆபிரகாமிடம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு முன்பாக இருந்தது போலவே) ஆபிரகாமினுடைய ராஜரீக சந்ததியும் அதே காரியத்தைக் காணும் என்று இயேசு கூறினார். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன், வருவதற்கு முன், தேவன் தாமே மாம்சத்தில் பிரத்தியட்சமாகி, அவர் (இயேசு) என்ன செய்வார் என்று அவர் (தேவன்) கூறியபடி, இயேசு சரியாகச் செய்ததைப் போலவே, கடைசி நாட்களிலும் செய்யப்படும் என்று கூறப்பட்டபடியே செய்வார். ஆகவே இதோ அந்த எல்லா வாக்குத்தத்தங்களும், இங்கே டசன் கணக்குகளில், சரியாக உங்களுக்கு முன்பாக எங்களால் வைக்கமுடியும், இது எப்பொழுது நடைபெறும் என்றாலும் ஆகவே, தங்கள் கரங்களை விரித்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய சபைகள் ''அதைக் குறித்து எனக்கு பயமாக இருக்கின்றது. அது எங்கள் குழுவைச் சேர்ந்ததல்ல. பாருங்கள்?'' என்கின்றன. ஆகவே அவர்கள் அதைக் குறித்து பயப்படுகின்றனர். அந்த ஒரு காரியம்தான் அவர்களைக் கிறிஸ்துவிடம், தாமாகிய கிறிஸ்துவிடம் கொண்டுவர முடியும். அது பயங் கொள்ளச் செய்கின்றது என்று அவர்கள் அலறுகின்றனர். “ஓ, எனக்கு தெரியாது. அது ஒரு ஆவியாயிருக்கும். உனக்கு தெரியுமா? அதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய ஒரே ஒரு காரியத்தைக் குறித்து அவர்கள் பயப்படுகின்றனர். 61ஆகவே அந்த துன்பம் சூழ்ந்த இருளான மணி நேரத்தில், அந்த தெரிந்து கொள்ளப்பட்ட சபையானது, அங்கே உட்கார்ந்து கொண்டிருக்க அந்த குழுவானது, அது ஒரு பேய் உருவமாக இருக்குமென்று பயந்து கொண்டிருந்தது. அதனுடன் எதையும் செய்ய அவர்களுக்கு விருப்பமில்லை. அப்பொழுது ''பயப்படாதிருங்கள். அது நான் தான்'' என்ற இனிமையான சத்தம் வந்தது. அவர்தான் அந்த வார்த்தை. அப்படித்தானே? அவர் வார்த்தையாயிருப்பதிலிருந்து ஒரு போதும் மாறுவதில்லை. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். “பயப்படாதிருங்கள்; அது நான் தான்'' என்று இபொழுது வார்த்தை இன்றிரவு கூறுவதை உங்களால் கேட்க முடிகின்றதா? நம் தலைகளை வணங்குவோம். 62பரலோகப் பிதாவே, இந்த... இந்த சாயங்காலம் மிக உஷ்ணமாக உள்ளது. மணி நேரங்கள் மிகவும் இருண்டு போயுள்ளது. எவ்வளவாக அக்கினியானது, பிரசங்க பீடத்தை விட்டுச் சென்றுவிட்டது. நீர் வயல்களில் மீதியானதைச் சேகரித்துக் கொண்டிருக்கின்றீர். நீர் ''இராஜ்யம் - ஒரு மனிதன் ஒரு வலையை எடுத்து கடலுக்குச் சென்று, அதில் வீசி அதை வெளியே எடுத்ததற்கு ஒப்பாயிருக்கிறது'' என்றீர். இராஜ்யம் அவ்விதமாகத் தான் இருந்தது. கர்த்தராகிய தேவன், ஒருநாளிலே அந்த தண்ணீரில் இருந்த அந்த கடைசி மீன்... ''பல விதமானவைகள் வாரிக் கொள்ளப்பட்டன'' என்று நீர் கூறினீர். அந்த சுவிசேஷ வலை சகல விதமானவைகளையும் வாரிக்கொள்ளும்; அது ஆமைகள், நன்னீர் நண்டு வகை, பூச்சுகள், சர்ப்பங்கள், தோட்டிமீன் போன்றவைகளை பிடித்தது. அது எதைப் பிடிக்கும் என்று நமக்கு தெரியாது, ஆனால் நீர் தேடின ஏதோ சில மீன் அங்கே இருந்தன. நீர் ஒருவர் தான் அந்த நியாயாதிபதி. ஆனால் உடனே அந்த ஆமை, அந்த நன்னீர் நண்டு, மற்ற எல்லாமும், திரும்பவுமாக சேற்று குழியில், திரும்பவும் தண்ணீருக்குள் சென்றுவிடுகின்றன. ஆனால் ஒரு நாளிலே முன்குறிக்கப்பட்ட, வருவதற்காக நியமிக்கப்பட்ட, அந்த சரீரத்தின் கடைசி பாகமான அந்தக் கடைசி மீன், அந்த ஏரியிலிருந்து வெளியே இழுக்கப்படும். 63லூத்தர், வெஸ்லி, அலெக்ஸாண்டர் காம்ப்பெல், ஜான் ஸ்மித், கால்வின், நாக்ஸ், ஃபின்னி, சாங்கி ஆகியோரின் நாட்களில், இன்னுமாக; பெந்தெகொஸ்தே காலத்தில், எஃப் எஃப். பாஸ்வர்த், ஃபிராட்ஷாம் இந்த அந்த மகத்தான மனிதரின் நாட்களில் நீர் ஒரு வலையைப் போட்டீர். பில்லி சண்டேயின் நாட்களில், காலத்தினூடாக நீர் வலைகளை வீசினீர். ஆகவே இப்பொழுது, கடலிலே இன்னுமாக வலை வீசி தேடிக் கொண்டிருக்கிறீர். கர்த்தாவே, அவர்களில் ஒருவர் இங்கே இன்றிரவு உட்கார்ந்திருக்கிறாரா, அப்படியானால், கிணற்றண்டையில் இருந்த அந்த சிறிய ஸ்திரீயைப் போன்று இருக்கட்டும். தன்னுடைய விபசார நிலைமையிலும், நீர் தான் அந்த மேசியா என்று அவள் அறிந்து கொண்டாள். அவள் அந்த அடையாளத்தைக் கண்டாள். அதுவே போதுமானது. அவள், ''நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்“ என்றாள். அது மேசியாவாக இருக்கும் என்ற ஒரு சிறு கருத்து கூட அவளிடம் இல்லை. அவள் ”நாங்கள் மேசியாவிற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்'' என்றாள், வேறு விதமாகக் கூறினால், “மேசியா வரும்போது இந்த காரிங்களை எங்களுக்கு அறிவிப்பார்''. நீர் “நான் தான் அவர்'' என்றீர். அதுவே தான். 64இப்பொழுது, இன்றிரவு கர்த்தாவே, அவர்கள் “பய்படாதிருங்கள், அது நான்தான். அது என்னுடைய வாக்குத்தத்தம் என்பதை காணட்டும். வியாதியஸ்தரை சுகப்படுத்தும், கர்த்தாவே; இழந்து போகப்பட்டிருக்கின்றவர்களை இரட்சியும், வெற்றிடமாய் உள்ளவர்களை நிரப்பும். எம்மாவுரிடத்திலிருந்து வந்த அவர்களைப் போல, “நாங்கள் செல்கையில், இன்றிரவு நாங்கள் செல்லும் போது எங்கள் இருதயத்திற்குள் நாங்கள் இன்றிரவு, கட்டடத்தில், அவருடைய தெய்வீக பிரசன்னத்தால் நமக்கு அவர் போதித்தபோது நம்முடைய இருயதம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?” என்று கூறட்டும். அது நீர்தான் என்று அவர்கள் எப்படி அறிந்து கொண்டார்கள், அவர்கள் உம்மை உள்ளே அழைத்தனர். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. இன்றிரவு நாங்கள் ஒவ்வொருவரும் உம்மை உள்ளே அழைக்கட்டும். நாங்கள் அதை புரிந்து கொள்ளவில்லையென்றாலும், எப்படியாயினும் நாங்கள் உம்மை உள்ளே அழைக்கட்டும். நீர் உம்மை வெளிப்படுத்தக் கூடிய ஒரே வழி அதுவேதான் ஆகும். ஆகவே உம்முடைய உயிர்த்தெழுதலிற்குப் பிறகு நீர் உம்மை வெளிப்படுத்தின விதத்தை நாங்கள்க வனிக்கிறோம், உம்முடைய சிலுவையிலறையப்படுதலிற்கு முன் நீர் அதேவிதமாக ஏதோ ஒன்றைச் செய்தீர். இப்பொழுது, இன்றிரவு வாரும் கர்த்தாவே, நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதாவராயிருக்கிறீர் என்று கூறியிருக்கின்றீர். பூமியில் நீர் மாம்சத்தில் இங்கே நின்று கொண்டிருந்த நாட்களில் இருந்தது போல, அதை மறுபடியுமாக எங்களுக்குச் செய்யும். அவர்களைப் போன்று எங்கள் இருதயம் கொழுந்து விட்டெரிந்து நாங்கள் வீடு செல்லட்டும். இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென். 65இப்பொழுது, இன்றிரவு ஆராதனையில் மிக ஊஷ்ணமாக உள்ளது என்று எனக்குத் தெரியும், சரியாக நாம் வெளியே நேரத்தில் செல்ல இருபது நிமிடங்கள் உள்ளன. (ஒலி நாடாவில் காலி யிடம் - ஆசி) என்னால்... நான் செய்கின்ற காரியங்களை என்னால் நிறுத்தவோ தடை செய்யவோ முயடிவில்லை. ஏதோ ஒன்றினால் நான் உந்தித் தள்ளப்படுகிறேன். என்னுடைய ஜீவியம் முழுவதுமாக நான் பார்த்திருக்கிறேன், அது எப்பொழுதுமே சரியாகத்தான் இருந்து வருகிறது. வேதாகமத்தில் என்ன இருக்கின்றதோ அதைத் தவிர வேறு எதையுமே அது என்னிடம் கூறினதில்லை. அதை என்னால் நிறுத்த முடியாது. அதைக் குறித்து எதையுமே என்னால் செய்ய முடியாது. எப்படியாயினும் அவர் அதைச் செய்கின்றார். ஆகவே, நான் நிச்சயித்து, கீழ்படிவேனென்றால், அது தேவையாயிருக்கின்ற யாரோ ஒருவர் உண்டு. ஆகவே நான் பயபக்தியாக இருப்பேன். ஆகவே அந்த நாளிலே, அந்த மகத்தான பரிசுத்தவான் பவுல் ''எந்த மனுஷனுடைய இரத்தமும் என் கையில் இல்லை“ என்று கூறினதைப் போல் நானும் விரும்புகிறேன். ஹ - ஹம். நான் - நான் உங்களுக்குச் சத்தியத்தைக் கூறட்டும். நான்... நான் உங்களை நேசிக்கிறேன். 66ஆகவே உங்களுக்கு சிறு பையன் இருந்திருப்பானென்றால், இப்பொழுது, சற்று முன்னர் உங்களைத் திட்டினேனே (Scolded) ஸ்திரீயே, அதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள், கத்தரித்த தலை மயிரைக் கொண்ட இன்னும் மற்ற காரியங்களை கொண்டிருக்கின்ற சகோதரிகளே, நான்... உங்களுக்கு ஒரு சிறிய பையன் இருந்து அவன் தெருவில் இருப்பானென்றால், நீங்கள், சிறு பையனே, அன்பே, நீ உள்ளே வந்துவிட்டால் நல்லது, அன்பே. எனக்குத் தெரியாது அவ்வாறு இருக்கும்; “ஒருக்கால் உன்னைக் சுற்றி காரை ஓட்டுவார்கள்'' என்பீர்களானால் நீங்கள் அந்த குழந்தையை நேசிக்கவில்லை. அது சரி. நீங்கள் அங்கே வெளியே சென்று அவன் தோலை உரித்துவிடுவீர்கள். அல்லது அவனை உள்ளே வரும்படி செய்வீர்கள். அது சரி. நீங்கள் அவனை நேசிக்கிறீர்கள். சுவிசேஷமும் அவ்விதமாகத் தான் உள்ளது. தேவன் உங்களை நேசிக்கின்றார். ''யாரை அவர் நேசிக்கின்றாரோ, அவரிடம் வரும் ஒவ்வொரு பிள்ளையையும் கடிந்து கொண்டு சிட்சிக்கின்றார்'' சிட்சையை உங்களால் சகிக்க முடியாமல், நீங்கள் சென்று அதைக் குறித்து கோபம் கொண்டால், நீங்கள் முறை தவறிப் பிறந்த பிள்ளைகள், தேவனுடைய பிள்ளைகள் அல்ல. ஆகவே அது வேத வசனம் என்பது ஞாபகமிருக்கட்டும். இப்பொழுது, அவரிடமிருந்து ஒரு வார்த்தை, ஒரு லட்சம் தடவைகள் நான் கூறுவதைக் காட்டிலும் ஒரு வார்த்தை அதிக அர்த்தம் அளிக்கும். அது அவர்தான். அவருடைய வாக்குத்தத்தத்தை நாம் அறிவோம். அவர் என்ன செய்வார் என்று வாக்குரைத்திருக்கின்றாரோ அதை நாம் அறிவோம். 67இப்பொழுது, அது எப்படி ஆரம்பிக்கின்றது என்று எனக்கு தெரியவில்லை. மறுபடியுமாக அவர் அட்டைகளைக் கொடுத்தாரா? இன்று நீங்கள் அட்டைகளை கொடுத்தீர்களா? அவை என்ன? J, அதுசரி, அதுசரி. நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக, எண் 1 முதல் நாம் ஆரம்பிப்போம். இப்பொழுது அவர்கள் கட்டடம் முழுவதுமாக இருக்கலாம். J - எண்-1. ஆகவே இப்பொழுது, இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கின்றது. நாம் ஆரம்பித்தோம் - ஒருமுறை, இதிலிருந்து, அதில், சில பின்பாக இன்னுமாக, சுற்றிலும், ஆனால் இங்கே இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கின்றது. ஆனால் உள்ளே வருகின்ற ஒவ்வொரு மக்களும், ஒவ்வொரு நாளும், வரிசையில் வரத் தருணம் இருக்கின்றது. அது நீங்கள்... 68இந்தக் கூட்டத்தில், இங்கே மேடையில் சுகமாக்கப்பட்டது போல, அங்கே சபையிலுள்ளவர்களில் இரண்டு மடங்கானோர் சுகமாக்கப்பட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? நிச்சயமாக, நீங்கள் அறிவீர்கள். பாருங்கள், ஒரு ஜெப அட்டை என்பது இங்கே ஜனங்களைக் கொண்டு வந்து அவர்கள் மத்தியில் பரிசுத்த ஆவியை கொண்டு வருவதற்கு மாத்திரமே, ஏனெனில் நீங்கள் அவ்விதமாகவே செய்து பழக்கப்பட்டிருக்கிறீர்கள். அது நம்மிடம் இப்பொழுது இருக்க வேண்டியதில்லை.ஜெப அட்டைகளை நாம் விட்டுவிடுவோம். கடந்த இரவு நாம் செய்ததுபோல், கடந்த இரவு ஜெப அட்டைகளை நாம் கொண்டிருக்கவில்லை. ஜெப அட்டைகள் இல்லாதவர்கள் மத்தியில் பரிசுத்த ஆவியானவர் சென்றார். அநேக காரியங்களை நான் கண்டேன். அதைக் குறித்து நான் எதையும் கூறவில்லை. ஏனெனில் அது அப்படித்தானா, இல்லையா என்று எனக்கு தெரியாதிருந்தது. அது அவர்கள் மேல் இன்னுமாக கறுப்பாக இருந்தது, நான் அதை அப்படியே விட்டுவிட்டேன். எனக்கும் தெரியாது. அவைகளை அழைப்பதில் எந்த நன்மையும் இல்லை. அவர் என்னவெல்லாம் கூறுகின்றாரோ அதுவே சரி, ஆகவே அவர் கூறுவதற்கெல்லாம் செவிகொடுங்கள். 69அது என்று கூறினீரா? J - எண்- 1. J-எண்-1 ஜெப அட்டை வைத்திருப்பது யார், உங்கள் கரத்தையுயர்த்துங்கள். மகனே; நீ அது அல்ல. இருக்காது, அது... ஓ என்னை மன்னியுங்கள். ஓ அங்கே பின்னால் சுவற்றில் சாய்ந்திருக்கிறார்கள். ஸ்திரீயே இங்கே வாருங்கள். அவர்கள். அவர்கள் இப்பொழுது அட்டைகளை கீழே கொண்டு வருவர், அந்த பையன்கள், சகோதரன் பார்டர்ஸ் அல்லது பில்லி, ஒருவர் (சில சமயங்களில் அவர்கள் இருவரும் ) உங்களுக்கு முன்பாக அட்டைகளை கலப்பார்கள், பிறகு உங்களுக்கு என்ன வேண்டுமோ அந்த அட்டையை உங்களுக்கு அளிப்பார்கள். நமக்கு தெரியாது; அவை. இவர்களுக்கு எண் 5 கிடைக்கலாம், அவர்களுக்கு எண் 7 கிடைக்கலாம், இவர்களுக்கு எண் 15 அவர்களுக்கு 95 கிடைக்கலாம், நமக்கு தெரியாது. ஆகவே பிறகு, மறுபடியுமாக, நான் வந்து, என் இருதயத்தில் எப்படியெல்லாம் தோன்றுகிறதோ, அப்படியே நான் அழைப்பேன், அது எங்கேயிருந்தாலும் சரி. அது... ஆகவே நான் உங்களுக்கு கூறுகிறேன். சில சமயங்களில், ஒரு வரிசையில் எத்தனைப்பேர் இருக்கின்றனர் என்று எண்ணி இந்த வரிசையில் உள்ளவர்களை வைத்து வகுத்து ஒரு விடையைப் பெற்றுக் கொள்வேன். பாருங்கள்? ஆகவே பிறகு நான், என்ன நான்... என் மனதிற்கு முதலாவதாக என்ன தோன்றுகின்றதோ அதை நான் அழைப்பேன். 70எண் 1, J- எண்-2. எண் 2, எண் 3, எண் 4, எண் 5, எண் 6, 7, 8, 9, 10, எல்லாரையும் வரவிடுங்கள் பாருங்கள்? ஒன்று, இரண்டு மூன்று நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து. அது அருமையானது. அந்த விதமாகத்தான், சரியாக வாருங்கள்... நில்லுங்கள், ஒருவர் அந்த வழியாகச் சென்று விட்டார். இப்பொழுது, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது. அது சரி, இதோ, இதோ, இருக்கின்றது பத்து. சரி, 11, 12, 13, 14, 15. இன்னும் ஐந்து பேர். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, நல்லது, அது அருமையானது. 16, 17, 18, 19, 20. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு. நான்கு பேரை மாத்திரம் என்னால் காண முடிகின்றது. 20, 20, எண் பதிலளித்தார்களா? சரி. இப்பொழுது, ஒரே நேரத்தில் அநேகம் பேர் நின்று கொண்டு இருக்க நான் விரும்பவில்லை. இப்பொழுது, இவர்களை முடித்துவிட்டால், சீக்கிரமாக முடித்தால், இன்னும் சிலரை நாம் அழைப்போம். நீங்கள் கூறவிரும்பினால். நாங்கள்... இன்னும் சிலரை நாம் அழைப்போம். இன்னும் ஐந்து பேரை அழைப்போம். J - தொடரில் 21 முதல் 25 வரை ஒன்று, இரண்டு, மூன்று, அங்கே பின்புறமாக, நான்கு. ஒன்று, இரண்டு மூன்று, நான்கு, அதுதான் ஐந்து. சரி, இங்கே நாம் நிறுத்துவோம். இங்கே வரிசையில் இருபத்தைந்து பேர். அவர்கள் - அவர்கள் வரிசையில் வந்து கொண்டிருக்கின்றனர். 71இப்பொழுது நான் உங்களிடம் ஒரு உதவியைக் கேட்கப் போகிறேன். எனக்கு உங்களுடைய இடையூரில்லாத... பதினைந்து நிமிடங்களுக்கு, பதினாறு நிமிடங்களுக்கு உங்களுடைய இடையூரில்லாத கவனத்தை தேவனுக்கு செலுத்துங்கள். அதை நீங்கள் செய்வீர்களா? இதை நீங்கள் செய்வீர்களா? உங்கள் இருதயத்தை திறந்துவிடுங்கள். இப்பொழுது, நான் கூறினதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு பழைய பழஞ்சொல் கூறும் வகையில், தண்ணீர் வாத்தின் முதுகின் மீது விழுவது போன்று, அதை உங்கள் முதுகின் மீது விழுந்து சென்று விடச் செய்யாதீர்கள். அதைச் செய்யாதீர்கள். இதை ஆழ்ந்து ஆராய்ந்து பாருங்கள். வேத வசனத்திலும், மணி நேரத்திற்கான வாக்குத்தத்தத்திலும் இல்லாத எந்த ஒரு காரியத்தையும் நான் கூறுவேனென்றால் நீங்கள் இங்கிருக்கும் மேலாளரைப் பார்த்து, அதைக் குறித்து என்னிடம் கூறுவதற்கு நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள். அது சரியே. வார்த்தையில் இருக்கின்றதைத் தவிர வேறொன்றையுமே நான்... நான் போதிப்பதில்லை. ஆகவே நான் அந்த வார்த்தையுடன் சரியாக நின்று, அது அந்த விதமாக இருக்கிறது என்று நான் கூறுவேனானால், தேவன்... அது வேதாகமத்தில் இருக்கின்றது. கர்த்தருடைய தூதன் வேதாகமத்தில் இல்லாத ஏதோ ஒன்றை என்னிடம் கூறினானென்றால், அது கர்த்தருடைய தூதனாக இருக்கமுடியாது. அது சரி. வார்த்தையில் உள்ளதைத் தவிர வேறெதையும் அவர் என்னிடம் ஒரு தடவையும் கூட கூறினதில்லை, நீங்கள் எனக்கு சாட்சியாயிருக்கிறார்கள். உலகிலுள்ள மொழிகளில், அவர் கூறிய ஆயிரமாயிரமானவைகளில், எப்பொழுதாவது தவறான ஏதோ ஒன்றை ஒரு முறையாவது கூறியிருக்கின்றாரா, அல்லது கூறி ஏதாவது நடக்காமல் போனதா? அவர் அவ்விதம் ஒரு காரியத்தையும் தவறாகக் கூறியதில்லை. 72கவனியுங்கள். அங்கேயிருக்கின்ற மேலாளரிடமும், அவர்களிடமும் கேளுங்கள். அதனுடைய மறுபிரதிபலிப்பான காரியத்தை மாத்திரம் இங்கே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அது சரியா சகோதரரே? என்ன, அங்கே வெளியே இருக்கின்றவர்களே, அங்கே தனிப்பட்ட வாழ்வில் அவர் “இந்த இடத்திற்கு சென்று இதைப் பார். அது நடக்கும். அதை இங்கே கூறு” என்பார். அது தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் (பாருங்கள்?) எல்லா நேரத்திலும் அதே விதமாகத்தான் இருக்கின்றது. ஜனக்கூட்டத்திலுள்ள மக்கள் இந்தச் சிறிய காரியங்களை மாத்திரமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்பொழுது, பயபக்தியாக இருப்பீர்களனால்... இப்பொழுது, இங்கே ஜெபவரிசையில் நின்று கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரும், எனக்கு நீங்கள் அந்நியர் தானே? அப்படியானால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அது சரி. உங்களைக் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது என்று அங்கே வெளியே இருக்கின்ற எத்தனைப் பேர் அறிவீர்கள்? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். இப்பொழுது, சிறிது... உங்களுக்கு நன்றி. நீங்கள் மாடி முகப்பிலோ, அங்கே சுவற்றின் அருகிலோ, இங்கேயோ நீங்கள் எங்கு இருந்தாலும் எனக்கு கவலை இல்லை, நான்... இப்பொழுது, அது உங்கள் நலனுக்காகவே உள்ளது. இது உங்கள் நன்மைக்காகவே இருக்கின்றது. பாருங்கள், இது உங்கள் நன்மைக்காகவே இருக்கின்றது. 73என்னுடைய சிறிய பேரப்பிள்ளை என்னிடம் பேசினான் என்று நினைத்தேன், ஆனால் அது அவனல்ல. என்னுடைய சிறு பேரப்பிள்ளை அந்த அளவில், இன்றிரவு, இங்கு எங்கோ உள்ளான், அது சிறிய பால் என்று நான் நினைத்தேன். அவன் மேடையின் மீது வந்து நின்று எனக்குப் பிரசங்கம் செய்வேன் என்று அவன் எப்பொழுதுமே கூறுவான், அவனுக்கு இரண்டு வயது கூட இல்லை. அந்த சிறு பையன் தன் அம்மாவைத் தேடிக் கொண்டிருக்கின்றான் என்று நான் நினைக்கிறேன். நான் உங்களுக்கு உதவி செய்ய முயற்சிக்கிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது, தேவன் அதை அறிவார். நான் உங்களுக்கு உதவி செய்ய முயற்சிக்கிறேன். பாருங்கள்? இப்பொழுது, கவனியுங்கள், அவர் நம் மத்தியில் வருவாரானால், அந்த நன்மையை நீங்கள் அடைய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, கடைசியில் அவர் செய்வதாக அவர் வாக்குத்தத்தம் செய்திருப்பதைப் போல, இயேசு கிறிஸ்து என்னும் நபர் மாம்சத்தில் கிரியை செய்து கொண்டிருப்பதை குறித்து சிந்தியுங்கள். அவர் அவ்விதமாக வாக்குரைத்திருக்கின்றார் என்று எத்தனைப் பேர் அறிவீர்கள். தம்முடைய முதுகு திரும்பினவாறு அந்த தூதன் சோதோமில் இருந்ததைப் போலவே, அது - அது தேவன் ஆகும். அது தேவன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது தேவன் என்று எத்தனைப் பேர் விசுவாசிக்கின்றீர்கள்? நிச்சயமாக, அதுதான். அதுதான் என்று வேதாகமம் கூறுகின்றது. ஆகவே அவர், இயேசு அதைச் சுட்டிக் காட்டினார். இப்பொழுது கவனியுங்கள். 74இப்பொழுது, அங்கே ஜெப அட்டை இல்லாத நீங்கள், நீங்கள் எங்கேயிருந்தாலும் சரி, நீங்கள் ஏதாவொன்றை எனக்கு செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, இந்த காரியங்களை நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் சுகமானீர்கள் என்று அது கூறுகையில் அல்லது நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று அது கூறுவதை கவனியுங்கள், அது என்ன கூறுகிறதென்று கவனியுங்கள். அது கூறுகிறதென்றால், அது உங்கள் விசுவாசத்தை வளர்ப்பதற்காகத் தான். ஆகவே பிறகு உங்கள் விசுவாசம் ஒரு கட்டத்திற்கு வருகையில், நீங்கள் சென்று தேவனை ஏற்றுக் கொள்வீர்கள். அது நானல்ல, ஏனெனில் பரலோகப் பிதா அறிவார்... இப்பொழுது இந்த வரிசையை நோக்கிப் பார்க்கிறேன்; எனக்கு தெரிந்த ஒருவரைக் கூட என்னால் காணமுடியவில்லை. முழு ஜனக்கூட்டத்தில் எனக்கு தெரிந்த இரண்டு அல்லது மூன்று பேரைத் தவிர வேறு யாரையும் என்னால் காணமுடியவில்லை. இப்பொழுது வரை எனக்குத் தெரியவில்லை, என்னால் ஒருவரை பார்த்து காண்பிக்க முடியும். எட்மண்ட் வே சில நிமிடங்களுக்கு முன்னர் இங்கிருந்தார் என்பதை நான் அறிவேன். நான் அவரைக் கண்டேன் என்று நான் நினைத்தேன், நான்... நான் தவறவிட்டேன். 75நான் தவறாக எண்ணப்படவில்லை என்றால், எனக்கு தெரிந்த ஓஹையோவைச் சேர்ந்த ஒரு மனிதனும் அவருடைய மனைவியும் ஃபிரிட்ஸிங்கர் என்னும் பேரைக் கொண்ட சிறுமியும் நான் காண்கிறேன். சகோதரனே! நீர்தான் சகோதரன் ஃபிரிட்ஸிங்கர், அப்படித்தானே? அங்கே ஒரு சிறிய இடைவெளியில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அந்த... இப்பொழுது, அது ஓஹையோவைச் சேர்ந்த என்னுடைய நண்பர்களான சகோதரன் மற்றும் சகோதரி ஃபிரிட்ஸிங்கர் ஆவர். அங்கே, அங்கே பின்புறமாக அமர்ந்திருக்கின்றது. அந்த பக்கமாக இங்கே தொண்ணூற்று இரண்டு வயதாகும் வில்லியம் டௌ என்னும் பெயரைக் கொண்ட மனிதர், அவரும் அவருடைய மனைவியும் நான் காண்கிறேன். அந்த அம்மாள் ஒரு நர்ஸ் ஆவார். ஓஹையோவைச் சேர்ந்த வில்லியம் டெள, என்னுடைய மிகத் தனிப்பட்ட நண்பர் ஆவார். சிறிது காலத்திற்கு முன்பு, தொண்ணூற்றொரு வயதாயிருக்கையில் அவருக்கு முழு இருதயமும் நின்றுவிட்டது, மாரடைப்பு. அவருடைய மனைவி உடனே என்னை தொலைபேசியில் அழைத்தார்; அவர் அப்பொழுது மரித்துக் கொண்டிருந்தார். 76ஓ, அவர் என்னுடைய இருதயப் பூர்வ நண்பராக இருந்தார். நான் அவரைக் காண காலையில் சென்றபோது, நான் கவலைப்பட்டேன். நான் காரை நிறுத்தினேன், சக்கரங்களில் ஒன்று சற்று வெளியே வந்து டயரை துண்டு துண்டாக அறுத்துக் கொண்டிருந்தது. ஆகவே நான் டெக்சாக்கோ கார் நிற்கும் நிலையத்திற்குச் சென்று சிறிது காற்றை செலுத்திக் கொண்டு பிறகு வெளியே வந்து அதைப் பார்த்தேன். பிறகு நான் மேலே பார்த்த போது சகோதரன் டௌ என்னுடைய சபையில் நடந்து என் கையைக் குலுக்குகிறதை நான் கண்டேன். நான் ''கர்த்தருக்கு ஸ்தோத்திரம்“ என்றேன். நான் இந்த வழியாக பார்த்தபோது அவர் தெருவில் நடந்து வந்து என்னுடைய கையைக் குலுக்கினார். நான் அவரிடம் சென்றேன். ஒரு நடுத்தர வயதுடைய யூத மனுஷனை, ஒரு வாலிப யூதனை, அந்த மருத்துவரைப் பார்த்தேன், ஆகவே நான், “டாக்டர், அவரைக் குறித்து என்ன?” என்றேன். அவர், ''அவர் சுகமடையக் கூடிய வாய்ப்பே இல்லை. அவருக்கு பிராணவாயு செலுத்தப்பட்டிருக்கிறது. அவர் மரித்துவிடுவார், அவருக்கு தொண்ணூற்றொன்று வயதாகின்றது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்'' என்றார். நான் “ஆம் ஐயா'' என்றேன். அவர், ''அது முழு மாரடைப்பாகும். ஒன்றுமே செய்ய முடியாது. அவர் மரிக்க வேண்டிய நேரம்'' என்றார். நான், “ஆம் ஐயா. ஆனால் அவர் மரிக்கப்போவதில்லை. அவ்வளவுதான்” என்றேன். நான் உள்ளே சென்று, பிராணவாயு கவசத்தினுள் என் கையை வைத்து “சகோதரன் டெள், நான் கூறுவதை உங்களால் கேட்க முடிகின்றதா?'' என்றேன். அவர் என்னை நோக்கிப் பார்த்தார். இப்பொழுது, உண்மையாகவே அவருடைய பெயர், அவர் ஒரு ஜெர்மானியர், டா-ஹ், நான் அதை டௌ என்று உச்சரிக்கின்றேன். பாருங்கள்? நான் - நான் அந்த பிராணவாயு கவசத்தின் கீழே என் கையை வைத்து, ”சகோதரன் டெள், நான் கூறுவது கேட்கின்றதா?'' என்றேன். அவர், “ஆம்'' என்றார். நான், ''நீர் மரிக்கமாட்டீர். நீர் மரிக்க போவதில்லை என்பதை நான் கண்டேன்'' என்றேன். 77அதிலிருந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, என்னுடைய சபையில் நின்று கொண்டிருந்தபோது, சபையில் நடந்து வந்து கொண்டிருந்தது யார், சகோதரன் டெள். நான் கூட்டத்தை விட்டுச் சென்று ஆற்றைக் கடந்து உணவு உண்ண உணவகத்திற்கு சென்றேன். நான் என் காரை விட்டு இறங்கி, தெருவில் நடந்து கொண்டிருந்த போது, அங்கே கையை நீட்டினவாரே சகோதரன் டெள வந்து கொண்டிருந்தார். அந்த தரிசனங்கள் தவறுவதில்லை. அந்த தொண்ணூற்று ஒன்று வயதான மனிதன் ஒவ்வொரு கூட்டத்திற்கும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றார், கலிபோர்னியாவில் இருந்தார். அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் சகோதரன் டெள உங்கள் கரத்தை உயர்த்துங்கள், இப்பொழுது ஒரு உண்மையான போர்ச் சேவகன் எப்படிப்பட்டவன் என்பதை ஜனங்கள் காணுவார்களாக. ஆம், அந்த விதமாகவே இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கின்றார்; தொண்ணூற்று ஒன்று வயது, ஒவ்வொரு கூட்டத்திற்கும் தொடர்ந்து வருகின்றார். நான் கூடாரத்தில் இருக்கையில், நான் பிரசங்கிக்கும் ஒரு சிறு செய்தியைக் கேட்க ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான மைல்கள் காரோட்டி செல்கின்றார். தேவனே, ''சாயங்காலத்தில் வெளிச்சமுண்டாகும்''. அன்றொரு நாள் நான் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன், நான் “சகோரன் டெள உமக்காக நான் என்ன செய்யவேன்டும்'' என்றேன். “ஒரே ஒரு வேண்டுகோள் மாத்திரமே, சகோதரன் பிரான்ஹாம். அவர் வரும்போது, அவருடன் நான் செல்ல விரும்புகிறேன்.'' நான், “கவலைப்படாதீர், அது உறுதி. நிச்சயம் என்றேன். இப்பொழுது, அந்த மனிதன், வந்திருக்கின்றார், ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, ஓ, வந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மற்ற எல்லாவற்றையும் பெற்று, ஒரு அற்புதமான கிறிஸ்துவின் ஊழியக்காரராக உள்ளார். 78இப்பொழுது, மிக பக்தியுடன் நான் ஒவ்வொருவரையும் கேட்கப் போகின்றேன்; நீங்கள் இங்கே நோக்கி ஜெபம் செய்யுங்கள். இப்பொழுது, நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய பிரதான ஆசாரியர் அவரேதான் என்பதை இங்கே எத்தனை போதகர்கள் இப்பொழுது சரியாக அறிந்திருக்கிறீர்கள்? நல்லது, அவர் அதே நேற்றும் இன்றும் என்றும், மாறாதவராக, அதே பிரதான ஆசாரியராக இருப்பாரானால் அதே விதமாகத்தான் அவர் செயல்படுவார். அவர், அவருடைய சரீரமும் மாத்திரமே அங்கே... தேவனுடைய சிங்காசனத்தின் மேல் இருக்கின்றது. எத்தனை பேர் அதை அறிவீர்கள்? இயேசுவின் சரீரம் தேவனுடைய சிங்காசனத்தின் மேல் இருக்கின்றது. தாம் செய்வேன் என்று வாக்குத்தத்தம் செய்தவாறே, தம்மை வெளிப்படுத்த நம்முடைய சரீரத்தை அவர் உபயோகிக்கின்றார். ''நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.'' நீங்கள் அப்படியே உட்கார்ந்து பயபக்தியாக இருந்து, கவனித்து, ஜெபிக்க நான் உங்களை கேட்டுக் கொள்ளப் போகிறேன். 79இப்பொழுது, பரலோகப் பிதாவே, அதைக் குறித்து எப்படி செய்ய வேண்டுமென்று எனக்கு தெரிந்த வரையில் நான் பயபக்தியாக முயற்சித்திருக்கின்றேன். கர்த்தாவே, இப்பொழுது உம்மிடத்திலிருந்து ஒரு வார்த்தை, அப்பொழுது அந்த மெல்லிய சத்தமானது ஜனக் கூட்டத்தினூடாக வந்து, “பயப்படாதிருங்கள்; அது நான்தான்'' என்று கூறட்டும். பிதாவே அதை அருளும். ஆகவே என்னையும், இன்றிரவு பிரசங்கிக்கப்பட்ட செய்தியையும் உம்முடைய வார்த்தையுடன் உறுதிப்படுத்தப்படும் படிக்கு உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். நீர் அதைச் செய்ய வேண்டியதில்லை. ஆனால் நீர் அதைச் செய்வீர் அல்லது நீர் அதைச் செய்யவே செய்வீர், ஏனெனில் நீர் அவ்விதமாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர். இயேசுவின் நாமத்தில் நீர் இதை அளிக்க நான் ஜெபிக்கிறேன். ஆமென். 80ஆகவே, ஒவ்வொருவரும் மிக பயபக்தியடன், உண்மையாக பயபக்தியுடன் இருங்கள். எப்படியிருக்கிறீர்கள்? இப்பொழுது, நாம் சென்று கொண்டேயிருக்கையில் வேத வசனத்தை நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். கர்த்தர் செய்தால், எனக்குத் தெரியாது. ஆனால் இங்கே, அந்த விதமாக நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன் (பாருங்கள்?) அது ஒருவிதமான அபிஷேகம். இது வேறுவிதமான அபிஷேகம். அது ஒரு ஆசீர்வாதம் மாத்திரமே. இந்த ஒரு காரியம் சரியாக உன்னிடத்திலிருந்து ஜீவனை எடுத்துக் கொள்ளுகின்றதாயிருக்கிறது. 81இப்பொழுது, இங்கே நின்று கொண்டிருக்கின்ற ஸ்திரீ. இவளை நான் என் வாழ்நாளில் பார்த்ததேயில்லை. நாம் அந்நியர்கள் தானே? உம்மை எனக்கு தெரியாது என்று நீங்கள் கூறினதை நான் விசுவாசிக்கிறேன். தேவன் உங்களை அறிவார். அவர் என்னை அறிவார். இப்பொழுது இங்கே நாம் எதற்காக நிற்கின்றோமோ அதற்காக நாம் நியாயத்தீர்ப்பின் நாளிலே பதிலளிக்க வேண்டுமென்பதை நீங்கள் அறிவீர்களா? அது உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுது நாம் என்ன செய்கின்றோமோ அதற்கு அங்கே நாம் பதிலளிக்க தேவன் வைக்கப் போகின்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? நான் இதை ஒரு நோக்கத்திற்காகவே கூறினேன். இப்பொழுது, நீங்கள் என்ன செய்கின்றீர்கள், உங்கள் மனதில் என்ன இருக்கின்றது அல்லது அதைப் போன்ற ஒன்றை கர்த்தராகிய இயேசு எனக்கு வெளிப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? நீங்கள் அதை விசுவாசித்துதான் ஆகவேண்டும், அப்படித்தானே? அங்கே ஜனக்கூட்டத்தில், நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி). 82இப்பொழுது, நம்முடைய கர்த்தரும் கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீயைப்போல் ஒரு மனிதனும் ஒரு ஸ்திரீயும் முதல் முறையாக சந்திக்கும் வகையில், அதே விதமாக நாம் நின்று கொண்டிருக்கிறோம். பாருங்கள்? இங்கே நாம், சந்திக்கின்றோம்... அது பரிசுத்த யோவான் 4-ஆம் அதிகாரம். இப்பொழுது, நீங்கள் இங்கே யாரோ ஒருவருக்காகவோ, நீங்கள் சுகவீனமாக இருக்கின்றீர்கள் என்றோ, அது குடும்பத் தொல்லை என்றோ, பணம் சம்பந்தமான கஷ்டம் என்றோ, அல்லது எதுவாயிருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் அதை கூறுவாரென்றால், எனக்கு ஒரு கருத்தும் இல்லை. ஆனால் அவருக்குத் தெரியும். உங்களுடைய இருதயத்தின் சிந்தனைகளை அவரால் பகுத்தறிய முடியும். அவர்தான் வார்த்தை. என்னால் முடியாது. நான் ஒரு மனிதன். நீங்கள் சிறிது தளர்ந்த நிலையில் இருக்கிறீர்கள், அதன் காரணமாகத்தான் இதைச் செய்கின்றேன். நீங்கள் பாருங்கள்? அது உங்களுக்கிருக்கும் சிக்கல்களில் ஒன்று, நரம்புத்தளர்ச்சியாகும். அது சரி. உங்களுக்கு சர்க்கரை வியாதியும் இருக்கின்றது; அதுதான் உங்களுக்கிருக்கும் மற்றுமொரு கோளாறாகும். அதுசரி. சிக்கல்கள், அநேக காரியங்கள் தவறாக உள்ளன. அது சரியா? அது சரியென்றால், உங்கள் கரத்தை உயர்த்துங்கள். பாருங்கள்? அவர் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? விசுவாசிக்கிறீர்களா? உங்கள் வயதின் காரணமாக உங்களுக்கு நரம்புத் தளர்ச்சியுண்டானது. (பாருங்கள்?) ஆனால் இப்பொழுது அவையெல்லாம் உங்களை விட்டுச் சென்றுவிடும். ஆகவே விசுவாசத்தினாலே நாம் கல்வாரிக்குச் சென்று ரத்தம் ஏற்றிக்கொள்வோம். 83இப்பொழுது சரியாக அவர் அதைத்தான் செய்தார். கிணற்றண்டை இருந்த அந்த ஸ்திரீக்கு அவளுடைய சிக்கல் என்னவென்பதைக் கூறினார். அவளுக்கு அநேக புருஷர்கள் இருந்தனர். உங்களுடையதோ என்ன... அது நரம்புத்தளர்ச்சி, இரண்டு அல்லது மூன்று நோய்ப் பிடிப்புகள் உள்ளன என்று நினைக்கின்றேன். அது சரி, அப்படித்தானே? அதே காரியம்தான். இப்பொழுது அவர் சீமோனிடத்தில் வந்தபோது, அவன் யாரென்பதைக் கூறினார். உங்களுடைய பெயர் என்னவென்பதை தேவன் என்னிடம் கூறமுடியும் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? அது உங்களை இன்னும் அதிகமாக விசுவாசிக்கச் செய்யுமா, அது செய்யுமா? திருமதி. ஸ்ட்ராங் (சகோதரி “ஸ்டெளட்'' என்று கூறுகிறார்கள் - ஆசி) ஸ்டெளட், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சென்று விசுவாசியுங்கள் நீங்கள்... எல்லாம் முடிந்துவிட்டது. 84வாருங்கள் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் உங்களுக்கு ஒரு அந்நியன் அல்லவா. உங்களை நான் அறியேன். தேவன் உங்களை அறிவார். உங்களுடைய இடர்ப்பாடு என்னவென்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆகவே அவர் அப்படிச் செய்தாரானால், கர்த்தராகிய தேவனே ஸ்தோத்தரிக்கப்படதக்கவர். அது உண்மையல்லவா? இப்பொழுது, கவலைப்பட வேண்டிய அவசியமில்லை - இல்லை. (பாருங்கள்?) நீங்கள் அதை உணர்கிறீர்களே அது... அது அவர்தான், சரி. நீங்களும் கூட நரம்புத்தளர்ச்சியால், மனநிலை நரம்புத் தளர்ச்சியால் அவதிப்படுகின்றீர்கள். நீங்கள் சீக்கிரமாக தளர்ந்து போகின்றீர்கள். நீங்கள் பித்தநீர்ப்பை கோளாறு உடையவர்களாக இருக்கிறீர்கள். ஈரலில் ஏதோ கோளாறு உள்ளது, உமக்கு இரத்தம் இல்லாமல் பலவீனமாக உள்ளீர்கள். அது சரி. உமக்கு ஏதோ இருக்கின்றது, ஒரு மனிதன் இங்கே தோன்றிக் கொண்டேயிருக்கச் செய்கிறது. தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய கணவரையும் சுகமாக்கக் கூடும்? வயிற்றுக் கோளாறு நீங்கும், அவர் சுகமாவார் என்று நினைக்கிறீர்களா? அதினால் தான் அவர் அவதிப்படுகின்றார். சென்று அவர் மீது கைகளை வைத்து, இவ்விதமாக கூறுங்கள், அது... அது அவரை விட்டுச் செல்லும்...?... 85நான் உங்களுக்கு அந்நியன். கர்த்தராகிய இயேசு நம்மிருவரையும் அறிவார், அப்படித்தானே? தேவன் உங்களைச் சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு உம்மிடம் இருக்கின்ற காரியத்தை, அந்த... அந்த... உங்களுடைய இருதயத்தில் உள்ளதை எனக்கு வெளிப்படுத்துவாரானால், அவர் உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு ஏதோ கோளாறு இருக்கின்றது. ஒன்று உங்களுக்குஒரு... ஒரு... ஒரு பித்தநீர்ப்பை கோளாறு உள்ளது. மற்றுமொன்று, அது உங்கள் பித்தநீர்ப்பை சீழ்வைத்து புண்பட்டதாக ஆகிவிட்டது, அதைத்தான் உங்கள் மருத்துவர் கூறியிருக்கின்றார். இப்பொழுது மற்றுமொரு காரியம், அதை அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும் என்கின்றனர். அது முற்றிலும் சரி. அது உண்மையல்லவா? இப்பொழுது, அதை அவரால் வேறு வழியில் செய்ய முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் விசுவாசம் அவருக்குள் இருக்கிறதென்று நீங்கள் எண்ணுகிறீர்களா? இப்பொழுது, அதைச் செய்து கொண்டிருப்பது நானல்ல என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது சரி. சொல்லுங்கள், நீங்கள் விசுவாசித்தப்படியே உங்களுக்கு ஆகக்கடவது. 86நாம் ஒருவருக்கொருவர் அந்நியர் என்று நான் நினைக்கிறேன். நம்மிருவரையும் கர்த்தராகிய தேவன் அறிவார். உங்களுக்கு உதவி செய்யக்கூடிய காரியங்களை எனக்கு அவராலே வெளிப்படுத்த முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவரால் முடியும் என்று நீங்கள், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் நடக்கும் என்கிறேன். அது மிக நல்லது. அது மிக அருமையானது. இப்பொழுது அநேக காரியங்கள், மிக அநேக கோளாறுகள் மற்றும் சிக்கல்கள் உங்களுக்கு இருக்கின்றன, இருமல் போன்ற ஒன்று, உங்களால் அதை மேற்கொள்ள முடியாது. உங்களுக்கு மிகவும் நரம்புத்தளர்ச்சியிருக்கின்றது. ஆகவே அது, அது சரி. உங்கள் இருதயத்தில் ஒரு பாரத்தையுடைவராயிருக்கிறீர், யாரோ ஒருவருக்காக அந்த பாரத்தைக் கொண்டிருக்கிறீர், அது உங்கள் மகன். அவனுக்கு ஏதோ குடும்பச் சச்சரவுகள் இருக்கின்றன. அவனும் அவனுடைய மனைவியும் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டேயிருக்கின்றனர். நீங்கள் அதற்காக மிகவும் பாரபட்டு இருக்கிறீர்கள். அது சரி. இப்பொழுது அது எல்லாம் சரியாகுமென்று உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா அது...?... இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 87எப்படியிருக்கிறீர்கள் ஐயா? நான் உங்களுக்கு அந்நியன் . நீங்களும் எனக்கும் அந்நியர் ஆவீர், அது ஆரம்... இப்பொழுது அந்த தரிசனங்கள் (நீங்கள் பாருங்கள்?) முழு வீடும் வெளிச்சம் அடைகின்றதைப் போல இருக்கின்றது, ஒரு சுழல் காற்றைப் போல சென்று கொண்டிருக்கின்றது. பாருங்கள்? ஆனால் நீங்கள் எதற்காக அங்கே நின்று கொண்டிருக்கின்றீர்கள் என்பதை கர்த்தராகிய இயேசு எனக்கு வெளிப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவரால் முடியும் என்ற நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? அதை நானும் கூட விசுவாசிக்கிறேன். உங்களுடைய ஆவியுடன் தொடர்பு கொள்ள நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்; சரியாக அதற்காகத்தான் நான் செய்து கொண்டிருக்கின்றேன். பாருங்கள், உங்களை எனக்குத் தெரியாது, ஆதலால் அதைச் செய்ய என்னைக் காட்டிலும் ஏதோ ஒன்று இருக்கக்கூடும். அவர் தாமே அதைச் செய்யும்படிக்கு நான் முற்றிலுமாக என்னை அகற்றிக்கொள்ள வேண்டியவனாக இருக்கிறேன். உங்களுக்கு புரிகின்றதா? 88இப்பொழுது, ஒரு காரியம், நீங்கள் ஒரு மிகப் பெரிய நரம்புதளர்ச்சியால் அவதிப்படுகிறீர், இந்த நரம்புத்தளர்ச்சி சில காலமாக இருந்து வருகிறது. அது சரி. அந்த நரம்பின் பாதிப்பு உங்களுக்கு உயர்ந்த ரத்த அழுத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. உங்களுக்கு பக்கவாதமும் ஏற்பட்டது. அதுதான். நீங்கள் ஒரு பிரசங்கியாக இருந்திருப்பீர் அல்லது நீர் ஒரு பிரசங்கியாக இருக்கிறீர். இப்பொழுது, நீங்கள் ஒரு பிரசங்கி. நீர் பிரசங்க பீடத்தில் நிற்கிறதை நான் கண்டேன். அப்படியானால் தேவனிடத்தில் விசுவாசம் கொள்ளுங்கள், அந்த நரம்புத்தளர்ச்சி உங்களை விட்டு சென்றுவிடும். எல்லா ஊழியக்காரர்களுக்கும் அது உண்டு. நீர் சுகமாவீர். நீர் உம்முடைய பிரசங்க பீடத்திற்கு திரும்பச் சென்று, தேவனுக்கு கீழ்ப்படிந்து, அந்த வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவிற்கு உண்மையாக இருங்கள். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பவரே, உங்கள் முதுகு கோளாறு உங்களிடமிருந்து சென்றுவிட்டது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? சரி, ஐயா, ''உமக்கு நன்றி கர்த்தாவே“ என்று கூறி சென்று கொண்டேயிருங்கள். 89வாரும், ஸ்திரீயே, எப்படி இருக்கிறீர்கள்? நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. அந்த ஸ்திரீகளுக்கான, பெண்களுக்கான கோளாறு உங்களை விட்டுச் செல்லப்போகிறதென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படி விசுவாசிக்கிறீர்களா? “கர்த்தாவே உமக்கு நன்றி'' என்று கூறி முன்னே சென்று கொண்டேயிருங்கள். சிறுநீரகக் கோளாறு, முதுகுகோளாறு, உங்களுடைய முதுகு, தேவன் உங்களை சொஸ்தப்படுத்தி அதிலிருந்து உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி, உங்கள் பாதையில் செல்லுங்கள். வாருங்கள், ஸ்திரீயே நான் உங்களுக்கு ஒரு அந்நியன். நான் உங்களிடம் எதையுமே கூறாமல் இருந்துவிட்டால், வியாதியஸ்தரை சுகப்படுத்த தேவனுடைய பிரசன்னம் இங்கேயிருக்கிறது என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா? அப்படிச் செய்வீர்களா? நல்லது. அப்படிச் செய்தால், உங்களுடைய வயிற்றுக் கோளாறு... நான் உங்களிடம் கூறிவிட்டேன். நீங்கள் பாருங்கள்? அது - அது அகன்றுவிட்டது, ஆகவே சென்று...? 90எப்படியிருக்கிறீர்கள், ஐயா? தேவன் இருதயத்தில் வாசம் பண்ணுகிறார். உங்கள் இருதயம் சிறிது காலமாக சரியாக இல்லை. அவர் அதை சரி செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் உங்கள் பாதையில் விசுவாசித்துக் கொண்டே செல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் அதை விசுவாசியுங்கள், அவர் அதை சரியாக்குவார். உங்களுக்கு நரம்புத்தளர்ச்சியுள்ளது, அது உங்களுக்கு வயிற்று சீழ்ப்புண் நோயை கொண்டிருக்கும்படி செய்துள்ளது. நீங்கள் சாப்பிட்டஉடன் உங்களுக்கு தொந்தரவு அளிக்கின்றது. அது இப்பொழுது அகன்றுவிட்டது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் சென்று ஏதாவதொன்றைச் சாப்பிட வாங்கிக் கொள்ளுங்கள். வே...?... உங்களுக்கு எழும்ப கடினமாக இருக்கின்றது, உங்கள் முதுகு உங்களை மிகவுமாக தொல்லைப்படுத்துகின்றது. நீங்கள் விசுவாசித்தால், அது உங்களை இனியும் தொல்லைப்படுத்தாது. நீங்கள் விசுவாசிப்பீர்களா? சரி, சென்று கொண்டேயிருங்கள், கர்த்தராகிய இயேசுதாமே உங்களை பூரணமாக சுகப்படுத்துவாராக. நீங்கள் எதைக் குறித்து தளர்ந்திருக்கிறீர்கள்? ''நான் இனி தளர்ச்சியுடையவனாக இருக்கமாட்டேன்'' என்று கூறிக்கொண்டே செல்லுங்கள், நீங்கள் தளர்ச்சியைக் கொண்டிருக்கமாட்டீர்கள். அது முடிந்துவிட்டது. சரி, ஐயா. 91வாருங்கள், ஸ்திரீயே. இப்பொழுது இந்த எத்தியோப்பிய ஸ்திரியும் வெள்ளை மனிதனும், இயேசுவை சந்தித்த விதமாகவே அப்படியே சரியாக உள்ளது. தெற்கில் அவர்கள் கொண்டிருந்தது போலவே, பிரிவினையைக் கொண்டிருந்தனர், ஆனால் அது நம்மிடையே இல்லை. எல்லா ஜனங்களும் தேவனுடைய ஜனங்கள் என்று இயேசு அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். அவள் ஒரு யூத ஸ்திரீயாக அல்லது சமாரியா ஸ்திரியாக இருந்தாலும் சரி, எந்தவித வித்தியாசமும் கிடையாது (பாருங்கள்?). இப்பொழுது, தேவன் உங்களுக்கு கூடிய சீக்கிரத்தில் உதவி செய்யாவிடில், கீல்வாத நோய் உங்களை முடமாக்கிவிடும். அவர் உங்களை சுகமாக்கி உங்களுக்கு உதவி செய்வாரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?அந்த ஸ்திரீ செய்தது போல உங்கள் பாதையில் சென்று தேவன் எப்படிப்பட்ட மகத்தான காரியங்களை உங்களுக்குச் செய்துள்ளார் என்று உங்கள் மக்களிடத்தில் கூறுங்கள். சரி. இப்பொழுது ஒரு அறுவை சிகிச்சை செய்பவர் கத்தியை வேகமாக எடுக்கின்றார். 92ஒரு நிமிடம், அது இந்த பெண் அல்ல. இப்பொழுது, ஒரு க்ஷணம், இப்பொழுது ஒவ்வொருவரும் பயபக்தியாயிருங்கள். சாத்தான் ஏதோ ஒன்றை செய்ய முயன்றான். இதோ அது. கட்டி, கட்டி, உங்கள் இருவருக்கும் இருக்கின்றது. அது சரி. உங்களுக்கும் கட்டி இருக்கின்றது; அவளுக்கும் கட்டி இருக்கின்றது, ஆகவே ஒருவரை நோக்கி ஒருவரிடம் பிசாசு உதவிக்காக கூச்சலிடுகின்றது. ஆனால் பரிசுத்த ஆவியானவரும் சத்தமிடுகின்றார். நீங்கள் யாரை விசுவாசிக்கப் போகின்றீர்கள், அவர்? சரி. ஸ்திரீயே அந்த கட்டிலிலிருந்து எழுந்து கொள். படுக்கையிலிருந்து எழும்பும். அதை விட்டெழுந்து விசுவாசி. இப்பொழுது அவரை விசுவாசித்துக் கொண்டே செல். ஆமென். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? எல்லா காரியங்களும் கைகூடும். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஜனக் கூட்டத்தில் இருக்கும் உங்களைக் குறித்தென்ன? இப்பொழுது நாம் எழுந்து நிற்போம். அதைச் செய்வதற்கு இதுதான் சரியான நேரம். ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு நபரும் இப்பொழுது எழுந்து நிற்கட்டும். தேவனுக்கு துதியை செலுத்துங்கள். உங்கள் கரங்களை உயர்த்துங்கள். கர்த்தராகிய இயேசுவே உமக்கு நன்றி. உம்முடைய மகத்துவத்திற்காகவும், வியாதியஸ்தரை நீர் சுகமாக்கியதற்காகவும் நாங்கள் உம்மை ஸ்தோத்தரிக்கின்றோம்.